நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் பட வெற்றியை தொடர்ந்து இப்போது அவரது 25வது படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்கும் ஒரு படத்திலும், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கனவே நடித்துவரும் படத்திலும் நடிக்க உள்ளார்.
ஏற்கனவே இன்னும் சில இயக்குனர்களிடம் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். அதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்புகள் பின்னர் வெளியாக உள்ளது. ஆனால் ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
விஜய் நடித்த தி கோட் படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் படத்தை இயக்கும் திட்டத்தில்தான் வெங்கட்பிரபு இருந்தார். ஆனால் அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயன் பிஸியாக இருந்ததால், வெங்கட்பிரபுவுக்கு தேதி ஒதுக்க முடியவில்லை. ஆனால் தி கோட் படத்தில் சிவகார்த்திகேயனை கிளைமாக்ஸில் கேமியோ ரோலில் நடிக்க செய்திருந்தார் வெங்கட்பிரபு. துப்பாக்கியை பிடிங்க சிவா என விஜய் பேசிய வசனம், சிவகார்த்திகேயனுக்கு டிரண்டிங் ஆக அமைந்தது.
இந்த சூழலில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் இருந்து வெங்கட்பிரபுவுக்கு திடீரென அழைப்பு வந்தது. சென்னையில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அவரை சிவகார்த்திகேயன் அழைத்துள்ளனர். அந்த இடம், திரை பிரபலங்கள் அடிக்கடி வந்து செல்லும் மதுபான பார் என்று சொல்லப்படுகிறது. அதனால் வெங்கட்பிரபுவும் ஆர்வமாக சென்றுள்ளார்.
அங்கு சிவகார்த்திகேயனும், வெங்கட்பிரபுவும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது நடிகர் சிவகார்த்திகேயன், எனக்கு தொடர்ந்து நிறைய லைன் அப்கள் இருக்கின்றன. அதனால் உங்களது இயக்கத்தில் இப்போதைக்கு நடிக்க வாய்ப்பு இல்லை. அதனால் 2 ஆண்டுகள் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும் என்று அதிரடியாக கூறிவிட்டார்.
சிவகார்த்திகேயன் தனது படத்தை இயக்க கால்ஷீட் தேதி குறித்து பேச தான் நேரில் அழைக்கிறார் என்ற நம்பிக்கையுடன் சென்ற வெங்கட்பிரபு பலத்த ஏமாற்றம் அடைந்துள்ளார். இப்படி நேரில் அழைத்து பேசி கடைசியில் கைவிரித்து விட்டாரே என்ற சோகத்தில் வெங்கட்பிரபு இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





