- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2 திரைப்படத்திற்காக வெற்றிமாறன் தயார் செய்திருக்கும் காட்சிகள் இத்தனை மணி நேரமா... படத்தை பங்கு...

விடுதலை 2 திரைப்படத்திற்காக வெற்றிமாறன் தயார் செய்திருக்கும் காட்சிகள் இத்தனை மணி நேரமா… படத்தை பங்கு போட்டு பாதியில் அனுப்புகிறாரா இயக்குனர்…

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் தீவிரம் காட்டி வருகிறார். முதலில் இந்த திரைப்படத்தை மிகவும் குறுகிய நாட்களில் மிகக் குறைந்த செலவில் எடுப்பதற்காக தான் வெற்றிமாறன் திட்டமிட்டு இருந்தார். இதில் கதையின் நாயகனாக சூரியும், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

வெறும் ஐம்பதே நாட்களில் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருந்த வெற்றிமாறன் அதற்கான பணிகளையும் தொடங்கினார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல கதையின் ஆழத்திற்கு சென்ற இயக்குனர் படத்தை மிக விரிவாக எடுக்க திட்டமிட்டார். அதன்படியே காட்சிகளும் நகர்ந்தன.

 

இறுதியில் இரண்டு பாகங்களை எடுக்க முடிவு செய்து அதன் முதல் பாகத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஜெயமோகன் எழுதிய துணைவன் என்னும் நாவலை லீடாக வைத்து தான் இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். ஆனால் தன் பங்கிற்கு அதற்கு ஏற்றது போல் காட்சிகளை மாற்றி அவர் படமாக்கி இருந்தார்.

 

இதில் முதல் பாகம், ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. குறிப்பாக சூரியின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருப்பதாக பலரும் தெரிவித்தனர். இந்த நிலையில் தான் தற்போது விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

 

இதற்கான சூட்டிங் பணிகளும் மிக நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மற்றும் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பை வெற்றிமாறன் நடத்தினார். இதில் விஜய் சேதுபதியை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

 

டிசம்பர் 5ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதி கட்டப் பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்போதே படத்தின் காட்சிகள் 5 மணி நேரம் கிட்ட நெருங்குகிறதாம். எவ்வளவுதான் சுருக்கினாலும் 4 மணி நேரத்திற்கு விடாமல் படம் இருக்கும் என்கிறார்கள். இதனால் இரண்டரை மணி நேரத்தை மட்டும் திரையரங்குகளில் விட்டு விட்டு, சில நாட்கள் கழித்து மீதியை ஓ டி டி தளத்தில் வெற்றிமாறன் ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்