ஆலமரம் போன்று தனுஷ் இன்று தமிழ் சினிமாவின் வளர்ந்திருப்பதற்கு மிகப் பக்க பலமாக இருந்தது இயக்குனர்கள் செல்வராகவன் மற்றும் வெற்றிமாறன் தான் என்று கூறினால் அது மிகை ஆகாது. செல்வராகவனின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் தனுசை வேறு ஒரு தளத்திற்கு அழைத்துச் சென்றன.
அதேபோல், வெற்றிமாறன் இயக்கத்திலும் தனுஷ் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. தொடர் தோல்விகளை அவர் சந்தித்து வந்த சூழலில், தனுசுக்கு பொல்லாதவன் திரைப்படம் மிகப் பெரிய திருப்புமுனையை கொடுத்தது. இந்த திரைப்படத்தின் மூலம் ஆக்சன் தளத்திற்கு பயணித்தார் தனுஷ்.
பிறகு மீண்டும் வெற்றிமாறன் உடன் இணைந்து ஆடுகளம் திரைப்படத்தில் நடித்தார். தனுசை நாம் சிறந்த நடிகர் என ஒவ்வொரு திரைப்படத்தில் கூறிக் கொண்டிருந்தாலும் அதனை தேசிய விருதின் மூலம் அங்கீகாரம் கிடைப்பதற்கு இந்த திரைப்படம் உறுதுணையாக இருந்தது. அது மட்டுமல்ல, ஆடுகளம் திரைப்படம் பரவலாகவும் பலரிடத்தில் பேசப்பட்டது.
இந்த நிலையில் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் மூன்றாவது திரைப்படமாக எடுக்கப்பட்டதுதான் வடசென்னை. நெடு நாட்களாக இந்த திரைப்படத்தின் பிராஜெக்ட் பற்றி பேசிக்கொண்டே இருந்த சூழலில், இறுதியாக இது செயல் வடிவம் கொடுத்து திரையரங்குக்கு வந்தது. அந்த படம் ரிலீசான நேரத்தில் அது அதிக வசூலை பெறவில்லை.
அதேசமயம் விமர்சன ரீதியாக இன்று வரை வடசென்னையை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதுமட்டுமல்ல அந்த திரைப்படம் வெளியானதிலிருந்து வெற்றிமாறன் எங்கு சென்றாலும் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தரப்பிடமிருந்து இது குறித்து சரியான பதில் வரவே இல்லை.
இப்படியான சூழலில் தனுஷ் இல்லாமல் வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார் வெற்றிமாறன். அதாவது அவர் தயாரிக்க மட்டும் போகிறாராம். வெற்றிமாறனின் உதவியாளர் தான் இதனை இயக்கத் திட்டமிட்டு உள்ளாராம். மிக முக்கியமாக மணிகண்டன் தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகன் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தனுஷ் இல்லாமல் இப்படி ஒரு வடிவம் பெறும் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஏற்பார்களா என்ற கேள்வி தான் தற்போது திரைத்துறை வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.





