- Advertisement -
Homeபொழுதுபோக்குவிசித்திராவை படுக்கைக்கு அழைத்த ஹீரோ இவர்தானா?.. ஆதாரத்தை வெளியிட்ட நெட்டிசன்கள்.. தீயா இருக்காங்களே ப்பா

விசித்திராவை படுக்கைக்கு அழைத்த ஹீரோ இவர்தானா?.. ஆதாரத்தை வெளியிட்ட நெட்டிசன்கள்.. தீயா இருக்காங்களே ப்பா

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் ரகளையாக சென்று கொண்டிருக்கிறது. பவா செல்லதுரை தானாக வெளியேற, பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இவர்கள் தவிர அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா, அன்னபாரதி, ஐஷு உள்ளிட்டோர் ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் செய்யப்பட்டனர்.

பிரதீப் ஆண்டனி இருந்தவரை சுவாரசியமாக சென்ற நிகழ்ச்சி அதற்கு பிறகு சுவாரசியம் இழக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் பிரதீப்பின் இடத்தை தற்போது விசித்திரா பிடித்திருக்கிறார். இவர்தான் இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் வயது அதிகம் உள்ள போட்டியாளர் ஆவார். எனவே இளம் போட்டியாளர்களுக்கு இவரால் ஈடுகொடுக்க முடியாது என்றே பலரும் பேசினர்.

- Advertisement -

ஆனால் அவர்களது பேச்சை அடித்து நொறுக்கும்விதமாக இருக்கின்றன விசித்திராவின் செயல்பாடுகள். பிரதீப்புக்கு சப்போர்ட் செய்தது, கமல் ஹாசனிடம் தைரியமாக பல விஷயங்களை பேசுவது, மாயாவுக்கு எதிராக வெளியிருப்பு போராட்டம் செய்தது, ஜெயிலுக்கு போக மறுத்தது என ஒவ்வொரு நாளும் கண்டெண்ட் தருபவராக மாறியிருக்கிறார்.

தற்போது அவர் கொடுத்திருக்கும் கண்டெண்ட் பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அதாவது நேற்று நடைபெற்ற பூகம்பம் டாஸ்க்கில் தன்னுடைய வாழ்க்கையில் பூகம்பம் ஏற்படுத்திய விஷயத்தை பகிர்ந்துகொண்டார். அதில் பேசிய அவர், “நான் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தேன். படத்தின் ஹீரோ டாப் லெவலில் இருந்தவர். முதல் நாள் ஷூட்டிங்கில் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள சென்றேன்.

- Advertisement -

அவரோ என் பெயரைக்கூட கேட்காமல் இந்தப் படத்தில் நீ நடிக்கிறாய் என்றால் இன்னைக்கு நைட் என்னுடைய ரூமுக்கு வந்துடு என்றார். ஆனால் நான் போகவில்லை. பிறகு அவரது ஆட்கள் வந்து மது அருந்திவிட்டு எனது அறை கதவை தட்டினார்கள். அதன் பின்பு அந்த ஹோட்டலின் அப்போதைய மேனேஜர் இப்போதைய எனது கணவர் எனக்கு உதவி செய்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையில் என்னை தங்க வைத்தார்.

அதனால் ஹீரோ மேற்கொண்டு கடுப்பானார். படத்தில் ஒரு ஆக்‌ஷன் காட்சியின்போது என்னை ஒருவர் தவறான முறையில் தொட்டார். நான் சண்டை பயிற்சியாளரிடம் முறையிட்டான். ஆனால் அவரோ என் உடலில் கை வைத்தவை விட்டுவிட்டு என்னை அறைந்துவிட்டார். அந்த சம்பவத்தில் எனக்கு யாருமே திரைத்துறையிலிருந்து சப்போர்ட்டுக்கு வரவில்லை. எனவேதான் சினிமாவிலிருந்து விலகிவிட்டேன்” என்றார்.

அவரது இந்தப் பேச்சு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளவாசிகளும் யார் அந்த ஹீரோ என்ற தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். அதன்படி 2001ஆம் ஆண்டு விசித்திரா நடிப்பில் பலேவடிவி பாசு என்ற படம்தான் வெளியாகியிருக்கிறது. அதில் விசித்திரா சொன்னபடி ஆக்‌ஷன் காட்சியும் இருக்கிறது. அந்தப் படத்தின் ஹீரோ பாலகிருஷ்ணா. எனவே அவர்தான் விசித்திராவை படுக்கைக்கு அழைத்திருக்கிறார் என உறுதியோடு கூறி அந்த ஆக்‌ஷன் காட்சி வீடியோவையும் பகிர்ந்துவருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்