அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததாக வெளிவந்த தகவலை ஒட்டி, “விடாமுயற்சி” திரைப்படம் வேறு ஒரு தயாரிப்பாளருக்கு கைமாறவுள்ளதாக கூறப்பட்டது. இதனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு சிலர் இத்திரைப்படம் டிராப் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறி வந்தனர். இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.
ஆனால் நடிகர் அஜித்குமாரும் இயக்குனர் மகிழ் திருமேனியும் சமீபத்தில் லண்டனுக்கு லுக் டெஸ்ட் எடுக்க சென்று வந்தனர். ஆதலால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிய வந்தது. இந்த தகவலால் ரசிகர்கள் குஷியடைந்தனர்.

“விடாமுயற்சி” திரைப்படம் காதலை மையமாக வைத்து ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளார் எனவும் ஒரு தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது அஜித்குமாரின் புதிய லுக் என்று கூறப்படுகிற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில் லுக் டெஸ்ட்டிஸ்காக அஜித்குமார் லண்டன் சென்றிருந்தார் என்பதை முன்னமே பார்த்தோம். அங்கு ஒரு ஹோட்டலில் அஜித் தனது நண்பர் ஒருவருடன் உணவருந்தும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. “விடாமுயற்சி’ திரைப்படத்தில் அஜித்தின் புதிய லுக் இதுதான் என்று தகவல் வெளிவருகிறது. அப்புகைப்படம் இதோ…

அஜித்குமார் “விடாமுயற்சி” திரைப்படத்தை தொடர்ந்து தனது உலக பைக் பயணமான பரஸ்பர மரியாதை பயணத்தை தொடங்கவுள்ளார். வருகிற நவம்பர் மாதம் அந்த பயணத்தின் தொடக்கமாக அஜித்குமார் ஆஸ்திரேலியா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





