- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் 69 படத்தை தயாரிக்கப் போவது யார்? போட்டிபோட்டு முண்டியடிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் -...

விஜய் 69 படத்தை தயாரிக்கப் போவது யார்? போட்டிபோட்டு முண்டியடிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் – அப்செட் ஆன தளபதி விஜய்

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடத்தி நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், விஜய் அடுத்ததாக தனது 69 வது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் துவங்குகிறது. இந்த படத்தை டைரக்டர் எச் வினோத் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை முதலில் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் மற்றும் லியோ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விஜயின் நெருஞ்கிய நண்பர் செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்எஸ் லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக தகவல் பரவியது.

- Advertisement -

அதாவது தனது நண்பர் மற்றும் மேலாளர் பெயரில் நடிகர் விஜயே தனது 69வது படத்தை தயாரிக்க உள்ளார் என்றும் தகவல்கூறப்பட்டது. ஆனால் இப்போது விஜயின் 69 வது படத்தை லலித் குமார், ஜெகதீஷ் சேர்ந்து தயாரிக்கவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக ஏற்கனவே முன்வந்த நிலையில், விஜய் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனால் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஏற்கனவே ரூ. 52 கோடிக்கு விலை பேசிய வாங்கியிருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், முதலில் வாங்குவதாக ஒத்துக் கொண்டு பிறகு இப்போது வாங்க மறுத்துவிட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இப்போது விஜயின் 69வது படத்தை விஜயின் பினாமிகள் தயாரிக்கவில்லை என்ற நிலையில் அந்தப் படத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்களிையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

நடிகர் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் பாட்னரான பேஷன் ஸ்டுடியோ சுதன், விஜயின் 69 வது படத்தை தயாரிக்க முயற்சித்து வருகிறார். இதற்காக இந்த ப்ராஜெக்ட்டை முடித்து தருமாறு ஜெகதீஷிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் பட்சத்தில் அதில் ஒரு பெரும் தொகையை ஜெகதீசுக்கு தருவதாக அவர் ஒத்துக் கொண்டுள்ளார்.

அதே போல், இப்போது விஜயின் கோட் படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் 69 வது படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. ஆனால் இதற்கு விஜய் சம்மதிப்பாரா என்பது தெரியவில்லை இதற்கிடையே பேஷன் ஸ்டுடியோ சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டு படங்கள், விஜய் சேதுபதி நடித்த மகாராஜா, ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஒரு படம், அருள்நிதி நடிக்கும் ஒரு படம் என அரை டஜன் படங்களுக்கு மேல் தயாரித்து வருகிறது. இந்நிலையில் விஜய் படத்தையும் தயாரிக்க அது தூண்டில் போட்டு வருகிறது. இதனால் விஜய் யாருக்கு வாய்ப்பு தருவது என்று அப்செட்டில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்