அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் வங்கி கொள்ளையையும் வங்கி மக்களிடம் அடிக்கும் கொள்ளையையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. விமர்சன் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது துணிவு.
அந்தப் படத்துக்கு பிறகு தனது 62ஆவது படத்தில் நடிக்கிறார் ஏகே. அதற்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. தடையறத்தாக்க, தடம், மீகாமன், கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கி பெரும் கவனம் ஈர்த்த மகிழ் திருமேனிதான் படத்தின் இயக்குநர். படத்தின் பெயருக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் மகிழ் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கையை வைத்திருக்கின்றனர்.
அதாவது மகிழ் திருமேனி ஆக்ஷன் படங்களை இயக்குவதில் கில்லாடி. அவரது ஸ்க்ரீன் பிளேவும், டீட்டெயிலிங்கும் வேறு லெவலில் இருக்கும் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என கணித்துள்ளனர் ரசிகர்கள். படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து வேறு எந்த அப்டேட்டும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்துவருகிறது. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், ஆரவ் உள்ளிட்டோரும் நடிப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் நீரவ் சில வாரங்களுக்கு முன்பு ட்விட்டரில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே படத்தின் ஷூட்டிங்போதே ஆர்ட் டைரக்டர் மிலன் உயிரிழந்தார். அதனால் ஷூட்டிங் கொஞ்சம் தடைபட்டது. இருந்தாலும் படத்தை விரைவில் முடிக்கும் நோக்கத்துடன் பம்பரமாய் சுழன்றுவருகிறாராம் மகிழ் திருமேனி. அஜித் தன்னுடைய உடல்நிலை காரணமாக தினமும் இரண்டு மணி நேரம் ஷூட்டிங்கிற்கு தாமதமாக செல்வதாக ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் எந்த அளவு உண்மை என தெரியவில்லை.
EXCLUSIVE 🥳
Latest Video Of THALA Ajith From Chennai Airport..🤩 #VidaaMuyarchi | #AjithKumar pic.twitter.com/8cqIkg2kUl
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) November 24, 2023
இந்த சூழலில் அஜித்குமார் சென்னை ஏர்போர்ட்டிலிருந்து வெளியே செல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது. கருப்பு கலர் கோட், கருப்பு கலர் பேண்ட் அணிந்தபடி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் படு ஸ்டைலிஷாக வெளியே செல்கிறார் அஜித். அஜித் தற்போது சென்னை வந்துவிட்டதால் விடாமுயற்சி நிலைமை என்னவென்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அஜித்துக்கான முதல் ஷெட்யூல்தான் முடிந்திருக்கிறது. அதனால்தான் அவர் சென்னை வந்திருக்கிறார். அடுத்தடுத்து துபாய், சென்னை ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடக்கும் என கூறப்படுகிறது.





