வெற்றிமாறன் இயக்கத்தில் இதுவரை பொல்லாதவன், ஆடுகளம் விசாரணை வட சென்னை அசுரன் விடுதலை மற்றும் விடுதலை இரண்டாம் பாகம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில் விடுதலை திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. இந்த திரைப்படத்தை ஜெயமோகன் எழுதிய துணைவன் நாவலை மையமாக வைத்து எடுத்திருந்தார் வெற்றிமாறன்.
முதலில் மிகச்சிறிய பட்ஜெட்டைக் கொண்டே இந்த திரைப்படத்தை எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. கதை செல்ல செல்ல அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால் இரண்டு பாகமாக எடுக்கத் திட்டமிட்டு அதன் முதல் பாகத்தையும் எப்போதும் போல வெற்றி படமாக மாற்றினார்.
முதல் பாகத்தில் சூரியை மையப்படுத்தியே கதை எழுதப்பட்டது. குமரேசன் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருந்தார் சூரி. இந்த நிலையில் இரண்டாம் பாகம், விஜய் சேதுபதியை மையப்படுத்தி கதை நகர, அதில் மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் உள்ளே வந்தனர். இதனைத் தொடர்ந்து ஓராண்டாக படத்தை இயக்கிய வெற்றிமாறன் கடந்த மாதம் இதனை ரிலீஸ் செய்தார்.
ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறவில்லை. சொல்லப்போனால் வெற்றிமாறன் இயக்கிய திரைப்படங்களிலேயே இதுதான் சுமாரான திரைப்படம் என பலரும் கூறினர். அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தின் முதல் பாதி மிகவும் வீக்காக எழுதப்பட்டிருந்தது. வெற்றிமாறன் திரைப்படமா இது என்று பலரும் கேள்வி எழுப்பும் வகையில் அது அமைந்தது.
இருப்பினும் இரண்டாம் பாதியை சற்று பட்டை தீட்டி எடுத்ததால் விடுதலை 2 திரைப்படம் ஓரளவு வெற்றியை பெற்றது. இப்படியான சூழலில், வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவுடன் இணைகிறார். அவர்களது கூட்டணியில் நீண்ட நாள் கிடப்பில் இருக்கும் வாடிவாசல் திரைப்படம் தான் எடுக்கப்படுகிறது. இதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க விடுதலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விடுதலை 2 வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக, அறிக்கை வெளியிட்டிருக்கும் அந்நிறுவனம், தங்கள் தயாரிப்பின் கீழ் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்ற இருப்பதாக கூறி இருக்கிறது. அதேபோல், உதயம் NH4 திரைப்படத்தை எடுத்த மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் திரைப்படத்தையும் இந்த நிறுவனம் தயாரிப்பதாக தெரிவித்துள்ளது.





