- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை இரண்டாம் பாகம் மூன்று நாட்களில் மட்டும் இத்தனை கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதா... போடு......

விடுதலை இரண்டாம் பாகம் மூன்று நாட்களில் மட்டும் இத்தனை கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதா… போடு… மிக அருமை தோழர்…

- Advertisement -

இந்த ஆண்டு மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய திரைப்படங்களில் முக்கியமான ஒன்று விடுதலை படத்தின் இரண்டாம் பாகம். இதற்குக் காரணம் அதன் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம் தான். கடந்த ஆண்டு மார்ச் மாதம் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி இருந்தது. அதில் சூரியை முதன்மைப்படுத்தியே காட்சிகள் நகர்ந்தன.

 

- Advertisement -

குமரேசன் கதாபாத்திரத்தில் காவலராக நடித்திருந்தார் சூரி. தன் இயலாமையால் எதுவும் செய்ய முடியாததையும், அதேசமயம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு அவர் தனது நடிப்பை வெளிப்படுத்திய காட்சிகளும் பெரும் வரவேற்பை பெற்றன. அட நகைச்சுவை நடிகர் சூரியா இது என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.

 

- Advertisement -

முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரம் ஓபன் ஆக சொல்லப்பட்டிருக்காது. அதை சுற்றியே கதை நகர்ந்தாலும், அவரைப் பற்றி பெரிதாக கூறியிருக்க மாட்டார் வெற்றிமாறன். இறுதியில் வாத்தியார் கதாபாத்திரம் கைது செய்யப்படுவது போல் அந்த திரைப்படம் இடம் பெற்றிருக்கும். இப்படியான சூழலில் தான் அங்கிருந்து இரண்டாம் பாகத்தை ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

 

இதில் பெருமாள் வாத்தியார் எப்படி ஒரு கூட்டத்தின் தலைவரானார், அவரின் பின்னணியில் நடந்தது என்ன என்பதையும், பெருமாள் வாத்தியார் மற்றும் காவல்துறைக்கு இடையேயான உரையாடலையும், மறுபக்கம் தலைமைச் செயலாளர் ஒரு வீட்டிற்குள்ளே அமர்ந்து கொண்டு எடுக்கும் முடிவையையும் மிக அழுத்தமாக காட்சிப்படுத்தியிருந்தார் வெற்றிமாறன்.

 

குறிப்பாக தலைமைச் செயலாளராக நடித்திருந்த ராஜீவ் மேனன், கலக்கி இருந்தார். முதலமைச்சரை அவர் போனில் பாஸ் என்று அழைப்பதும், அவர்களுக்குள் இருக்கும் உரையாடலும் ஆடியன்ஸ்களுக்கு மிகவும் புதிதாக இருந்தது. இதேபோல் பெருமாள் வாத்தியார் மற்றும் காவல்துறை இடையேயான காட்சிகளையும் நன்றாக எடுத்து இருந்தார் வெற்றிமாறன். கிளைமாக்ஸ் காட்சியும் பெரிய அளவில் பேசப்பட்டது.

 

இப்படி குறைகளைத் தாண்டி படத்தில் நிறைகள் நிறைய இருப்பதால், விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை வெளியான இந்த திரைப்படம், வெறும் மூன்று நாட்களில் 22 கோடியே 46 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறது. படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருப்பதால், வரும் நாட்களிலும் கலெக்சனை அள்ளும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்