- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்ஐகே-வில் இருந்து போஸ்டர் வெளியிட்ட விக்னேஷ் சிவன்... ஆனால் அதுல அப்படி ஒரு விஷயம் இல்லவே...

எல்ஐகே-வில் இருந்து போஸ்டர் வெளியிட்ட விக்னேஷ் சிவன்… ஆனால் அதுல அப்படி ஒரு விஷயம் இல்லவே இல்லையே… ஒருவேளை உண்மை தானோ என வருத்தத்தில் ரசிகர்கள்…

- Advertisement -

போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். 2012 தீபாவளி பண்டிகைக்கு வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியை தழுவியது.

இதனைத் தொடர்ந்து இயக்கத்திற்கு சிறிய கேப் விட்டிருந்தார் விக்னேஷ் சிவன். அந்த சமயத்தில் மாபெரும் வெற்றி பெற்ற வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் அவர் நடித்திருந்தார். இதன் பிறகு தனுஷ் தயாரிப்பில், விஜய் சேதுபதி நயன்தாரா ஆகியோரை வைத்து நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கினார்.

ரொமான்டிக் மற்றும் ஆக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்ட இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூலிலும் ஏகப்பட்ட லாபத்தை கொடுத்தது. இதன் மூலம் விக்னேஷ் சிவன் பிரபலம் அடைந்தார். படபிடிப்பின் போது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட பின்னாளில் அது திருமணத்தில் முடிந்தது.

இது ஒரு பக்கம் இருக்க அவர் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து அவர் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை கொடுத்தார். நயன்தாரா சமந்தா என இரு கதாநாயகிகள் இருந்த இந்த திரைப்படமும், வசூலில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் பெறவில்லை.

இப்படியான சூழலில்தான் பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த திரைப்படத்தை முதலில் சிவகார்த்திகேயனை வைத்தே விக்னேஷ் சிவன் எடுப்பதாக இருந்தது. ஆனால் அந்த திட்டம் தள்ளிப் போய்க் கொண்டிருக்க, கடைசி நேரத்தில் பிரதீப் ரங்கநாதன் வந்தார்.

காதலை சயின்டிஃபிக் தளத்திற்கு எடுத்துச் செல்வதே இந்த திரைப்படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. கீர்த்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, முக்கியமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அது தள்ளிப் போவதாக தகவல் வெளியானது. இப்படியான சூழலில் பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி எல்.ஐ.கே திரைப்படத்திலிருந்து போஸ்டர் வெளியானது. அதில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி படத்திலிருந்து முதல் கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பலரும் கூறியது போலவே அதில் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாததால் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக பேசுகிறார்கள்.

சற்று முன்