- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி நன்றி மறந்தவர்களாக இருக்கலாமா? நடிகர்கள் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் எழுந்த பகிரங்க குற்றச்சாட்டு!

இப்படி நன்றி மறந்தவர்களாக இருக்கலாமா? நடிகர்கள் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் எழுந்த பகிரங்க குற்றச்சாட்டு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தவர் கேப்டன் விஜயகாந்த், சினிமா நடிகராக நடிகர் சங்கத் தலைவராக தேமுதிக அரசியல் கட்சித் தலைவராக ஒரு பண்புள்ள மனிதராக தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நல்ல மரியாதைக்குரிய நபராக வாழ்ந்து மறைந்தவர். குறிப்பாக சினிமா வாழ்விலும் பொது வாழ்விலும் பலருக்கும் பலவிதமான உதவிகளை தானாக முன்வந்து செய்தவர் கேப்டன்.

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இப்போது கொம்பு சீவி என்ற படத்தில் நாயகனாக தற்போது நடித்திருக்கிறார். இந்த படம் நாளை 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் சீமராஜா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் கொம்பு சீவி படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.

- Advertisement -

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் சீமராஜா உள்ளிட்ட படங்களில் பொன்ராம் இயக்கத்தில் நடித்தவர் சிவகார்த்திகேயன். அவரது சினிமா பயணத்தில் இந்த படங்கள் மிக முக்கியமான வெற்றிப் படங்களாக இருந்தன. ஆனால் அவர் இதுவரை கொம்பு சீவி படம் குறித்து எதுவும் பேசவில்லை. குறிப்பாக இயக்குனர் பொன்ராமுக்கோ, கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கோ அவர் இதுவரை ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை.

அதேபோல் நடிகர் விஜயகாந்தால் வளர்ந்த பல நடிகர்கள், நடிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஒருவர் கூட இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவில்லை. சண்முக பாண்டியனுக்கு வாழ்த்துகளும் சொல்லவில்லை. செந்தூரப்பாண்டி படம் மூலம் நடிகர் விஜய்க்கு அடையாளம் தந்தவரே விஜய காந்த்தான். நடிகர் விஜய் கூட கேப்டன் மகன் நடிகர் சண்முக பாண்டியனுக்கு வாழ்த்து சொல்லி ஒரு பதிவு போடவில்லை. வீடியோ மெசேஜ் அனுப்பவில்லை.

- Advertisement -

ஏற்கனவே மதுர வீரன் சகாப்தம் படை தலைவன் ஆகிய 3 படங்களில் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்திருக்கிறார். எனினும் கொம்பு சீவி படத்தை அவர் பெரிதும் நம்பி இருக்கிறார். ஏனெனில் இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திரைக்களத்தில் உருவாகியுள்ளது. அவரை வாழ்த்தி வரவேற்க மனம் இல்லாமல் தமிழ் சினிமா கலைஞர்கள் இருப்பது ரசிகர்கள் இடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடித்த தி கோட் படத்தில் ஏஐ உருவத்தில் விஜயகாந்தை பயன்படுத்திய விஜய், இதுவரை சினிமாவில் வளர்ந்து வரும் சண்முக பாண்டியனுக்கு அழைத்துக்கூட பேசவில்லை. அவருக்கு ஆதரவாக இதுவரை வாய்ஸ் கூட கொடுக்கவில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜய் நினைத்திருந்தால் அவரது ஜனநாயகன் படத்திலேயே சண்முகபாண்டியனை நடிக்க வைத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்