- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படம் பிரமோசன், நிச்சயமாக அந்த விஷயத்துக்கு அனுமதி இல்லை, நடிகர் விஜய் போட்ட...

தி கோட் படம் பிரமோசன், நிச்சயமாக அந்த விஷயத்துக்கு அனுமதி இல்லை, நடிகர் விஜய் போட்ட திடீர் உத்தரவு – என்ன தளபதி இப்படி பட்டுன்னு சொல்லிட்டாரு…

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. வெங்கட்பிரபு படத்தை இயக்கி உள்ளார்.

இதுவரை தி கோட் படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி உள்ளன. விசில் போடு, சின்ன சின்ன கண்ணிலே, நீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு என யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த பாடல்கள், ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை, ஆரவாரத்தை பெறவில்லை.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த படத்தில் இளம் வயது விஜய் என்ற பெயரில் டீஏஜிங் செய்யப்பட்டதாக காட்டப்படும் விஜயின் தோற்றம், ரசிகர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. சாதாரணமான தோற்றத்தில் தாடி, மீசையில் வெள்ளை முடிகள் காணப்பட்டாலும், இளைஞராக காணப்படும் விஜயை, இப்படி அலங்கோலப்படுத்தி விட்டார்களே, என ரசிகர்கள் பயங்கர அப்செட்டில் இருந்து வருகின்றனர்.

தி கோட் படத்துக்கு பிறகு விஜய், தனது 69வது படத்தில் நடித்துவிட்டு அடுத்ததாக தமிழக அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட இருக்கிறார். அதனால் அவரது அடுத்த படத்தை அரசியல் படமாக இயக்குனர் எச் வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தில் மமிதா பைஜூ மகளாக நடிக்க இருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தி கோட் படத்தின் பிரமோசனுக்காக, எந்த இடத்திலும் தவெக கட்சியின் பெயரை பயன்படுத்த கூடாது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் சில பகுதிகளில் தவெக கட்சியினர், தி கோட் படம் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்து, இப்போதே கட்சி பெயரில் போஸ்டர்களை அடித்து ஒட்ட ஆரம்பித்து விட்டனர். எக்காரணத்தை முன்னிட்டும் இனி இப்படி படத்தின் பிரமோசன் பணிகளில் கட்சியின் பெயரை பயன்படுத்தவே கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சினிமாத்துறை தந்த புகழ் வெளிச்சத்தில்தான்
அரசியலுக்கே வருகிறோம். பிறகு அரசியல் பெயரை, சினிமாவுக்கு பயன்படுத்துவது அபத்தம் என்று விஜய் நினைத்து இந்த அறிவிப்பை விஜய் வெளியிட்டு இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்