- Advertisement -
Homeபொழுதுபோக்குஹிப் ஹாப் ஆதியை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி எடுத்த முக்கிய முடிவு - இப்பவாவது...

ஹிப் ஹாப் ஆதியை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி எடுத்த முக்கிய முடிவு – இப்பவாவது உங்களுக்கு ஞானம் வந்ததே என்று மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. காதலில் விழுந்தேன் நான் அவன் இல்லை வெடி வேட்டைக்காரன் வேலாயுதம் டிஸ்யூம் சுக்ரன் நினைத்தாலே இனிக்கும் என பல படங்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இந்த படங்களில் இடம்பெற்ற பல பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவை.

குறிப்பாக டைலாமோ டைலாமோ நான் அடிச்சா தாங்கமாட்டே தீ பிடிக்கும் வயது ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு தயக்கம் தையதா தையதா நாக்கு முக்கா நாக்கு முக்கா என பல பாடல்களில் அவரது இசை திறமை ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. அத்துடன் அவர் நாயகனாக நடித்த படங்களுக்கும் அவரே இசையமைத்த நிலையில் அந்த பாடல்களும் பெரிய அளவில் கவனம் பெற்றன.

- Advertisement -

பிச்சைக்காரன் பிச்சைக்காரன் 2 திமிரு புடிச்சவன் அண்ணாதுரை காளி சைத்தான் எமன் நான் சலீம் இந்தியா பாகிஸ்தான் ரோமியோ கொலை ரத்தம் கோடியில் ஒருவன் என பல படங்களில் விஜய் ஆண்டனி நடித்தார். இதில் பிச்சைக்காரன் திமிரு புடிச்சவன் படங்கள் பெரிய ஹிட் படங்களாக இருந்தன. இந்தியா பாகிஸ்தான் காமெடி படமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியை போலவே இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்பு நாளடைவில் நடிகராக மாறியவர்தான் ஹிப் ஹாப் ஆதி. சுந்தர் சி இயக்கிய பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு அன்பறிவு பிடி சார் நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்தார்.

- Advertisement -

அதன்பிறகு அவர் இசையமைத்தும் படங்களில் ஹீரோவாக நடித்தும் சம்பாதித்த மொத்த பணத்தையும் கொட்டி கடைசிப்போர் என்ற படத்தை தயாரித்தார். படம் மிக மோசமான தோல்வியை தழுவிய நிலையில் இனி நடிப்பும் வேண்டாம், தயாரிப்பும் வேண்டாம் என்ற முக்கிய முடிவு செய்து, இனி படங்களில் இசையமைப்பது மட்டுமே தனது குறிக்கோள் என்ற நிலைக்கு வந்துவிட்டார்.

ஹிப் ஹாப் ஆதியை போலவே நடிகர் விஜய் ஆண்டனியும் இனி நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டு இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடர முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் அவர் 3 இசை கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். அவரது பாடல்களுக்கு ரசிகர்களுக்கு தந்த உற்சாகம் வரவேற்பை பார்த்து மிரண்டு போன விஜய் ஆண்டனி, இனி இசையமைப்பாளராக சினிமாவில் தன் பயணத்தை நீடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்