நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த மாதத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த நிலையில், இப்போது ரஷ்யாவில் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய், வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் ரஷ்யாவில் முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சாய்பாபா கோவில் ஒன்றில் நடிகர் விஜய் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது. ஜோசப் விஜய் என தன் பெயர் இருந்தாலும், சாதி மதங்களை கடந்த ஒரு சமூக நல விரும்பியாக நடிகர் விஜய் கோவில்களுக்கு செல்பவர் என்று பலரும் பாராட்டினர்.
இந்த சூழலில், நடிகர் விஜய் சென்ற கோவில் அவரே கட்டிய சொந்த கோவில்தான் என்றும், அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் தீவிர சாய்பாபா பக்தை என்ற நிலையில், தனது அம்மாவுக்காக சொந்த செலவில் நடிகர் விஜயே கட்டித் தந்த கோவில் என்றும் இன்று தகவல் பரபரப்பாக பரவி வருகிறது.
சென்னையை அடுத்துள்ள அம்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கொரட்டூரி்ல் இந்த சாய்பாபா கோவிலை நடிகர் விஜய் சொந்தமாக கட்டியிருக்கிறார் என்றும், கடந்த பிப்ரவரி 11ம் தேதி இந்த ஷீரடி சாய்பாபா கோவிலின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் நடிகர் விஜய், அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் மற்றும் புஸ்லி ஆனந்த் ஆகியோர் கலந்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
முதலில் சென்னையில் நடிகர் விஜய்க்கு சொந்தமான உதயம் தியேட்டருக்கு அருகில்தான் ஷீரடி சாய்பாபா கோவிலை நடிகர் விஜய் கட்ட திட்டமிட்டதாகவும் ஆனால் அங்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடப்பதால், அங்கு கோவில் கட்டப்படாமல், கொரட்டூரில் 8 கிரவுண்டில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, அம்மாவுக்காக கோவில் கட்டினார். அதே போல் அம்மா ஷோபாவின் ஆசைக்காக சாய்பாபா கோவிலையே விஜய் கட்டி தந்துள்ளார் என்று தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. ஆனால் இது உருட்டா, உண்மையா என்பதுதான் தெரியவில்லை.





