- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதிர்மறை விமர்சனங்களால் வெலவெலத்துப் போனதா தவெக? - இடைத் தேர்தல் தொகுதிகளில் எத்தனை நாட்கள் விஜய்...

எதிர்மறை விமர்சனங்களால் வெலவெலத்துப் போனதா தவெக? – இடைத் தேர்தல் தொகுதிகளில் எத்தனை நாட்கள் விஜய் பிரசாரம்? – லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

கடந்த 4 மாதங்களாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் தவெக அரசு மீதும் முதல்வர் விஜய் மீதும் மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் இடைத்தேர்தல் நடக்க உள்ள தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் திமுக அல்லது அதிமுக வெற்றிப் பெறும் என்று உளவுத்துறை மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

ஏனெனில் கடந்த 4 மாதங்களில் முதல்வர் விஜய் மீதும் அவரது அமைச்சரவை மீதும் மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். குறிப்பாக சட்டசபை கூட்டங்களில் விஜய் பேசுகிற விதமும் அவர் காட்டுகிற உடல்மொழியும் திமுகவை எள்ளி நகையாடுகிற அமைச்சர்களின் பேச்சும் மக்களுக்கு கடும் அதிருப்தியை தந்துள்ளது.

- Advertisement -

எந்த ஒரு முதல்வரும் இதுவரை ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் இவ்வளவு மோசமான எதிர்ப்பை மக்களிடம் சந்திக்கவில்லை. குறிப்பாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இலவசமாக கார், 75 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு தொகை, 1200 கோடி ரூபாய் புதிய தலைமை செயலகம், மேட்டூர் அணையை திறந்து வைக்க ரூ. 6 கோடி செலவு என முதல்வர் விஜயின் செயல்பாடுகள் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

மேலும் லண்டனில் முதலீட்டை ஈர்ப்பதற்காக சென்ற முதல்வர் விஜய் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, ஒரு வாரம் ஜாலியாக டூர் சென்று திரும்பியிருக்கிறது. சென்னையில் உள்ள தொழில் நிறுவனத்தை லண்டனுக்கு வரவழைத்து தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதை சென்னையிலேயே எளிதாக செய்திருக்க முடியும்.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் கலந்துக்கொண்ட கார் ரேஸ் போட்டியை துவக்கி வைக்கவும் அவரது தோழி திரிஷாவுடன் கார் ரேஸ்சை கண்டுகளிக்கவும் விஜய் மக்கள் வரிப்பணத்தில் இப்படி ஒரு லண்டன் பயணம் செய்தது சரிதானா என்று மக்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளனர்.

அதுவும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 பெண்கள், மீண்டும் தவெக வேட்பாளர்களாக அதே தொகுதிகளில் நிற்பது அந்த தொகுதி மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த மாத இறுதியில் தாராபுரம் 2 நாள் மதுராந்தகம் 2 நாள் என 4 நாட்கள் முகாமிட்டு விஜய் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தோல்வி பயம் காரணமாகவே 4 நாட்கள் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்