- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் 69 படத்தின் தயாரிப்பாளர் யார் தெரியுமா? போடு வெடிய; இது யாருமே எதிர்பார்க்காத...

விஜய் 69 படத்தின் தயாரிப்பாளர் யார் தெரியுமா? போடு வெடிய; இது யாருமே எதிர்பார்க்காத புது டிவிஸ்ட்டா இருக்குதே தளபதி – அப்போ தரமான சம்பவம் இருக்கு!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் 95 சதவீதம் முடிந்துவிட்டது. இப்போது ரஷ்யாவில் ஒரு வாரமாக ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டைரக்டர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் ரஷ்யாவில் முகாமிட்டு படப்பிடிப்பை வேகமாக நடத்தி வருகின்றனர்.

வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி, இந்த படம் ரிலீஸ் ஆகிறது. முதலில் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 படம் வெளியாக இருப்பதால் 20 தினங்கள் கழித்து, செப்டம்பர் 5ம் தேதி விஜய் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

- Advertisement -

இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 69வது படத்தை டைரக்டர் எச் வினோத் இயக்க உள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் 1, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய எச் வினோத் இந்த படத்தை வேற லெவலில் தருவார் என விஜய் ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

விஜய் தனது 69வது படத்துடன் சினிமா பயணத்தை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், இந்த படத்தை ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனம் டிவிவி எண்டர்டெயின்மென்ட், டிவிவி தனய்யா தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அவர்கள் விஜயின் அனுமதியின்றி சாட்டிலைட், டிஜிட்டல் குறித்த வியாபாரத்தில் ஈடுபட்டதால், கடுப்பான விஜய் அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நோ சொல்லி விட்டார்.

- Advertisement -

அதன்பிறகு, விஜயின் 69வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. ஆனால் 2026 சட்டசபை தேர்தலை குறிவைத்து அரசியல் கட்சி துவங்கியுள்ள விஜயின் படத்தை தயாரிக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் முன்வராது. அதுமட்டுமின்றி இது முழுக்க முழுக்க அரசியல் படமாகவும் உருவாக உள்ளது.

இந்நிலையில் விஜய் தனது கடைசி படத்தை அவரே தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அவரது பினாமிகள் எஸ்எஸ் லலித்குமார், ஜெகதீஷ் போன்றவர்கள் மூலம், விஜய் தனது படத்துக்கான பிஸினஸ்களை கவனித்துக்கொள்வதாகவும் ஒரு தகவல் இருந்து வருகிறது. அந்த அனுபவங்களின் அடிப்படையில் இப்போது தனது 69வது படத்தை தனது சொந்த தயாரிப்பாக, நடிகர் விஜயே தயாரிக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்