- Advertisement -
Homeபொழுதுபோக்குஓ… அதுதான் காரணமா? அஜீத்குமார் விஜய் வாழ்த்து குறித்த விவகாரத்தில் வெளியான திடீர் தகவல் -...

ஓ… அதுதான் காரணமா? அஜீத்குமார் விஜய் வாழ்த்து குறித்த விவகாரத்தில் வெளியான திடீர் தகவல் – உண்மையை போட்டுடைத்த பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி போல ரஜினி கமல் போல இப்போது விஜய் அஜித்குமார் கடும் போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர். ஆனால் நடிகர் விஜய் சினிமாவுக்கு மிக விரைவில் குட் பை சொல்லிவிட்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டார்.

அதேபோல் நடிப்பில் காட்டும் ஆர்வத்தை விட நடிகர் அஜித்குமார் சமீப காலமாக விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார். கார் ரேஸ் பைக் ரேஸ் ரைபிள் சுடுதல் போன்ற விளையாட்டுகளில் அதிக விருப்பம் கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார் இப்போது துபாயில் நடந்து வரும் கார் பந்தய போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

அஜித்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராகவும் அவர் இருக்கிறார். அஜித்குமார் துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென விபத்தில் சிக்கினார். இதையடுத்து அவர் பந்தயத்தில் கலந்து கொள்ளாமல் அணியின் தலைவராக மட்டுமே செயல்பட முடிவு செய்துவிட்டார். தொடர்ந்து வரும் அக்டோபர் வரை இந்த கார் பந்தயப் போட்டிகளில் அஜித்குமார் கவனம் செலுத்த உள்ளார்.

துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி 3ம் இடம் பெற்றது. இதற்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதேபோல் மத்திய அரசு கடந்த 25ம் தேதி குடியரசு தினத்துக்கு முந்தைய நாளில் நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருதை அறிவித்தது. நடிகர்கள் சிவாஜிகணேசன் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமாருக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட போதும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

- Advertisement -

கார் ரேஸ் போட்டியில் 3ம் இடம் பிடித்த போதும், அஜித்குமாருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்தபோதும் நடிகர் விஜய் வாழ்த்து சொல்லவில்லை என்ற தகவல் பரவி விமர்சனங்கள் எழுந்தன. அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் அளித்த பேட்டியில், அஜித் குமார் கார் ரேஸ் போட்டியில் 3ம் இடம் வந்த போதும், முதலில் போனில் அழைத்து வாழ்த்து சொன்னவர் நடிகர் விஜய்தான். அதேபோல் மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்தபோதும் அஜீத்குமாருக்கு முதலில் வாழ்த்து சொன்னது விஜய்தான் என்று கூறியிருந்தார்.

ஆனால் இதை அப்போதே உள்ளாமல் இப்படி ஒரு விமர்சனம் எழுந்த பிறகு சொல்வது ஏன் என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறுகையில், வரும் 6ம் தேதி விடாமுயற்சி படம் ரிலீஸாகிறது. அந்த படத்துக்கு விஜய் ரசிகர்களால் எந்த விதமான எதிர்ப்பும் வரக்கூடாது. சமூக வலைதளங்களில் படம் குறித்து அவர்கள் மோசமாக விமர்சித்து படத்தின் வெற்றியை பாதித்து விடக்கூடாது என்பதற்காகவே இப்படி விஜய் வாழ்த்து சொன்னதாக சுரேஷ் சந்திரா கூறி இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்