- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரு கௌப்பி விட்டது, இப்போது தளபதிகிட்ட வந்து நிக்குது, எதிர்கால அரசியல்வாதி நீங்க, இதையெல்லாம் தட்டி...

அவரு கௌப்பி விட்டது, இப்போது தளபதிகிட்ட வந்து நிக்குது, எதிர்கால அரசியல்வாதி நீங்க, இதையெல்லாம் தட்டி கேட்க மாட்டீங்களா? – விஜய்க்கு வந்த புது தலைவலி

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் மைக் மோகன் நடிப்பதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பின் அவர் ரீ என்ட்ரி ஆகிறார்.

மிக்ஜாம் புயல் காரணமாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மாநகரம் மழைவெள்ளத்தில் பல இடங்களில் தத்தளிக்கிறது. வீடுகளை சுற்றிலும் தேங்கியுள்ள மழைவெள்ளத்தில் சிக்கி, வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர்கள் தரப்பில் இருந்தும், ரசிகர்கள் தரப்பில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. இதில் மழைவெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகர் அமீர்கான், விஷ்ணு விஷால், நடிகை நமீதா போன்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மக்களும், பாதுகாப்பான இடங்களுக்கு மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதன் பாதிப்பு உச்சத்தில் இருந்த நேரத்தில், நடிகர் விஷால் ஒரு வீடியோ பதிவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். அதில் 2015க்கு பிறகு மழைவெள்ளத்தில் அதை விட மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு சென்னையை பார்ப்பது தர்மசங்கடமாக, கேவலமாக உள்ளது. இந்த நேரத்தில் வெளியே வந்து எம்எல்ஏ, கவுன்சிலர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இது சமூக வலைதளங்களில் வைரலானது. அதிலும், எதுக்காக நாங்கள் வரி கட்டுகிறோம் என்ற கேள்வியை கேட்க வைத்து விடாதீர்கள் என்ற ஒரு கடும் வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். இதற்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பதில் அளித்து, இதை அரசியல் பண்ண முயற்சிக்க வேண்டாம். எல்லா பணிகளும் சரியாக நடந்து வருகிறது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறோம் எனக் கூறிய பதிவும் வைரலானது,

இதற்கிடையே எந்த அரசியலும் சாராத நடிகர் விஷால், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்புகிறார். குறையை தைரியமாக சுட்டிக்காட்டுகிறார். ஆனால், வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் நடிகர் விஜய், வாயே திறக்காமல் மவுனமாக இருந்துவிட்டாரே, அவர்தானே இதுபோன்ற குறைகளை ஒரு வருங்கால அரசியல் தலைவராக முதலில் தட்டிக்கேட்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பி, அதை வைரலாக்கி வருகின்றனர். இது விஜய் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறது.

- Advertisement -

சற்று முன்