- Advertisement -
Homeபொழுதுபோக்குவீடுகளை சுற்றி குளமாக தேங்கிய மழைநீரில் இருந்த ஆபத்து, நிஜ ஹீரோவாக நடந்துக்கொண்ட விஜய் ரசிகர்கள்...

வீடுகளை சுற்றி குளமாக தேங்கிய மழைநீரில் இருந்த ஆபத்து, நிஜ ஹீரோவாக நடந்துக்கொண்ட விஜய் ரசிகர்கள் – சமூகவலைதளங்களில் குவியும் பாராட்டு

- Advertisement -

மிக்ஜாம் புயலால், பெய்த கனமழையால் சென்னை மாநகரமே மழைவெள்ளத்தில் மிதக்கிறது. பல இடங்களில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. வீடுகளை சுற்றிலும் மழைவெள்ளம் குளம் போல தேங்கி கிடக்கிறது. மழைவெள்ளம் வடியாமல் அப்படியே தேங்கியிருப்பதால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியவில்லை.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் என மக்கள் பிரதிநிதிகள் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே சென்று உதவிகளை செய்து வருகின்றனர். பல இடங்களில் இன்னும் மக்கள் உணவு இல்லாமல், மின்சாரம் இல்லாமல் வீடுகளுக்குள் சிக்கி தவித்து வருகின்றனர். பல விதங்களில் மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஷால், நடிகர் விஜய், இயக்குநர் தங்கர்பச்சான் போன்றவர்கள், களத்தில் இறங்கி பணிசெய்து மக்களுக்கு உதவுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி ரஜினி, அஜீத் ரசிகர்கள் களத்தில் இறங்கி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

இதுதவிர மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்கள் என, அவரவர் தரப்பில் உதவிகளை செய்து வருகின்றனர். மழைவெள்ளத்தில் சிக்கிய மக்களை, அவர்கள் வீடுகளில் இருந்து மீட்டு பத்திரமான இடங்களில் சேர்த்து வருகின்றனர். நடிகை நமீதா, விஷ்ணு விஷால், இந்தி ஸ்டார் நடிகர் அமீர்கான் உள்ளிட்டவர்கள் இவ்வாறான நிலையில் இருந்து மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எண்ணூரில் ஒரு பகுதியில் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கிய நிலையில், அங்குள்ள மக்களுக்கு உதவ யாரும் வரவில்லை. இதையடுத்து, விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த இருவருக்கு அங்குள்ள பாதிக்கப்பட்ட சிலர் உதவிக்கு அழைத்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அங்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு தேங்கியுள்ள மழை தண்ணீரில், ரசாயன கழிவுகள் நிறைய கலந்து, தண்ணீரே எண்ணெய் குளம் போல மாறியுள்ளது. ரசாயன கழிவுகள் நிறைந்த அந்த மழைவெள்ளத்தில் இறங்கிச் சென்ற விஜய் ரசிகர்கள், அங்கிருந்த மக்களுக்கு உதவியுள்ளனர். கெமிக்கல் வெள்ளத்தில் கலந்துவிடப்பட்டதா, அல்லது மழை வெள்ளத்தில் அதுவே கவிழ்ந்து கலந்துவிட்டதா என தெரியவில்லை. எனினும் ஆபத்தை பொருட்படுத்தாமல் ஆபத்து நிறைந்த ரசாயனம் கலந்த மழைதண்ணீரில், மக்களுக்கு உதவ சென்ற அந்த விஜய் மக்கள் இயக்க இளைஞர்களின் வீடியோ வைரலாகி, சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்