கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். அவருக்கென்று சிறுவர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட வயதினர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது படம் ரிலீஸ் என்றாலே அன்றைய தினத்தை தீபாவளி போன்றும் திருவிழா போன்றும் கொண்டாடி தீர்ப்பார்கள். அந்தவகையில் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் தொடங்கியிருந்த லியோ படத்தின் டிக்கெட் புக்கிங் தற்போது தமிழ்நாட்டிலும் தொடங்கியிருக்கிறது. முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். லியோ படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பையும், ஹைப்பையும் பார்க்கையில் கண்டிப்பாக இந்தப் படம் பல வசூல் சாதனையை அசால்ட்டாக முறியடிக்கும் என கருதப்படுகிறது.
லியோ ரிலீஸுக்காக விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். அதன் வெளிப்பாடு லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டிலேயே தெரிந்தது. உச்சக்கட்டமாக அவர்கள் ரோகிணி தியேட்டர் இருக்கைகளை அடித்து துவம்சம் செய்திருந்தனர். ஆனால் அவர்களின் அந்த செயல் பலரையும் முகம் சுளிக்கவே வைத்தது. அவர்களின் செயலால் தியேட்டர் நிர்வாகத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நஷ்டம்.
விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக விஜய் இதற்கு அமைதி காத்திருக்கக்கூடாது உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை கண்டித்திருக்க வேண்டும். அவரது மௌனத்தை பார்க்கையில் ரசிகர்களின் வெறித்தனத்தில் குளிர் காய்கிறாரோ என்று தோன்றுகிறது. இவர் எப்படி தமிழ்நாட்டை ஆள்வதற்கு தகுதி படைத்தவராக இருப்பார் என்று சகட்டுமேனிக்கு விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.
ஆனால் விஜய் சின்ன சலனம்கூட இல்லாமல் தளபதி 68 படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார். இந்நிலையில் லியோ ரிலீஸை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ஒரு முடிவு எடுத்திருக்கின்றனர். அந்த முடிவு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் பட ரிலீஸ் அன்று விஜய்யின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யமாட்டோம் என்று கூறியிருக்கின்றனர். அதேசமயம் ஏழை, எளிய குழந்தைகளுக்குர் ரிலீஸ் நாள் அன்று நலத்திட்ட உதவிகள் செய்வோம் என்றும் அறிவித்துள்ளனர்.
அவர்களின் இந்த முடிவு மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதால் ஒரு பிரோயஜனமும் இல்லை என்பதை இப்போதாவது புரிந்துகொண்டார்களே என்று சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்ச்தி தெரிவித்திருக்கின்றனர்.





