- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்த பிரபல பாடலாசிரியர்... படத்தில் ஹீரோவாக யார் நடிக்கிறார் தெரியுமா... ஒட்டுமொத்த...

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்த பிரபல பாடலாசிரியர்… படத்தில் ஹீரோவாக யார் நடிக்கிறார் தெரியுமா… ஒட்டுமொத்த டீமும் பலமாக இருப்பதால் எகிறும் எதிர்பார்ப்பு…

- Advertisement -

சேரன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான ஆட்டோகிராப் திரைப்படம் தமிழ் சினிமாவில் பொற்காலம் என்று கூறலாம். இப்போது வெளியாகும் இளைஞர்களின் ஒவ்வொரு காலகட்ட காதல் கதைகளுக்கு, அதுவே அச்சாரமாக அமைந்தது. சொல்லப்போனால் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரேமமும், இந்த ஆட்டோகிராப் திரைப்படத்தின் தழுவல்தான்.

 

- Advertisement -

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் எடுத்தது. வாழ்க்கையில் உந்து சக்தியாக அந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் இடம்பெற, தேசிய விருதையும் பெற்று அசத்தியது. இப்படி பாடல் வரிகளுக்கு தேசிய விருது பெற்றவர் தான் பா விஜய்.

 

- Advertisement -

1996 ஆம் ஆண்டு வெளியான ஞானப்பழம் என்னும் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார் பா விஜய். அங்கிருந்துதான் அவரது திரையுலக வெற்றி பயணம் ஆரம்பித்தது. குறுகிய காலத்திலேயே பல திரைப்படங்களுக்கு அற்புதமான வரிகள் உடைய பாடல்களைக் கொடுத்து அசத்தினார்.

 

குறிப்பாக குடும்பம் குடும்பமாக கொண்டாடிய வானத்தைப்போல திரைப்படத்தில், எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடலை எழுதியவர் இந்தப் பா விஜய் தான். பட்டித் தொட்டி எங்கும் இந்த திரைப்பட பாடல் ஹிட் அடிக்க, அதன் பாடல் ஆசிரியர் யார் என்று தேடிய போது தான் பா விஜய் பலராலும் அடையாளம் காணப்பட்டார்.

 

தொடர்ந்து, பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி வந்த பா விஜய், வசனகர்த்தா, நடிகர் என அடுத்தடுத்து முன்னேறினார். அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து ஸ்ட்ராபெரி என்னும் படத்தையும் இயக்கினார்.

 

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார் பா விஜய். படத்திற்கு அகத்தியா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஜீவா. அர்ஜுன் ராசி கண்ணா உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

- Advertisement -

சற்று முன்