வாரிசு, லியோ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் நடித்து முடித்து இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். ரசிகர்கள் இதனை சுருக்கி கோட் என்று செல்லமாக அழைக்க, படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. தற்போது இதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளில் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் வெங்கட் பிரபு.
இந்தத் திரைப்படத்தில் சினேகா மீனாட்சி சௌத்ரி லைலா பிரபுதேவா பிரசாந்த் அஜ்மல் வைபவ் வி டிவி கணேஷ் யோகி பாபு ஜெயராம் பிரேம்ஜி அமரன் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார். வெயில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மீண்டும் இந்த படத்திற்காக விஜய் உடன் இணைந்து இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் சூட்டிங் பல்வேறு நாடுகளில் நடைபெற்றது. குறிப்பாக தாய்லாந்து, ரஷ்யாவில் முக்கியமான காட்சிகளை எடுத்தார்கள். திருவனந்தபுரத்தில் ஒரு கிரிக்கெட் மைதானத்திலும் இதன் படப்பிடிப்பு பரபரப்பாக எடுக்கப்பட்டது. இதில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பது உறுதியாக இருக்கிறது.
அண்மையில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கோட் படத்தில் இருந்து ஒரு வீடியோ வெளியானது. அதில் வெளிநாட்டில் இரண்டு விஜயையும் ஒரே பைக்கில் செல்வது போலவும், அவர்களை ஒரு குழுவினர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயல்வது போன்ற காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. படத்தின் முக்கியமான காட்சிகள் ரஷ்யாவிலேயே எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்துவிட்டு சினிமா விமர்சகர்கள் கதையின் மையக் கருவை கூறினர். அதாவது மாஸ்கோவில் பணிபுரியும் இந்திய அதிகாரியை குற்றம் சுமத்தி விரட்டுவதாகவும், அதன் பின்னால் இருக்கும் அம்சம் தான் இந்த திரைப்படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. இந்தக் கதையோட்டத்தில், டைம் டிராவல் யுக்தியையும் வெங்கட் பிரபு புகுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் விஜயை இளமையான தோற்றத்தில் காட்டுவதற்காக ஏஐ தொழில்நுட்பத்தை படக்குழு நாடியது. இதற்காக படக்குழுவினர் வெளிநாடு எல்லாம் சென்று வந்தனர். இந்த நிலையில் தற்போது கோட் திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் மூன்றாவது பாடலில் இளமையான விஜயை காட்டி இருக்கிறார்கள். ஆனால் அதுக்கு காண்பதற்கே ஒவ்வாமையாக இருக்கிறது. இது விஜயா அல்லது யாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்படி ஒரு தோற்றத்தை காட்டுவதற்காகவா நீங்கள் வெளிநாட்டிற்கு சென்றீர்கள் என்றும் அவர்கள் காட்டத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்படி முதல் லுக்கே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க படக்குழு தற்போது கப்சிப் ஆகி இருக்கிறது.





