- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் எம்ஜிஆர் பாணியை பின்பற்றாத விஜய், அரசியலில் அவர் வழி நடப்பாரா? - விஜய் பார்மூலா...

சினிமாவில் எம்ஜிஆர் பாணியை பின்பற்றாத விஜய், அரசியலில் அவர் வழி நடப்பாரா? – விஜய் பார்மூலா தான் சக்சஸ் ஆகுமா?

- Advertisement -

நடிகர் எம்ஜிஆர், சினிமாவில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்ததே அவரது 40வது வயதில்தான். அதுவரை நாடகங்களிலும், சினிமாவில் சின்ன சின்ன ரோல்களிலும் நடித்துக்கொண்டு இருந்தவர், சதிலீலாவதி என்ற படத்தின் மூலமே, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகுதான் பல வெற்றிப் படங்களில் நடித்து, முன்னணி நடிகராகி மாறினார். அப்போது எம்ஜிஆர் சிவாஜி என்ற இரண்டு ஜாம்பவான்களுக்கு பிறகுதான் மற்ற நடிகர்கள் இருந்தனர்.

சினிமாவில் இருந்த போதே அண்ணாத்துரை, பெரியார், காமராஜர் போன்றவர்களின் நட்பு வளையத்தில் இருந்தவர் எம்ஜிஆர். பிறகு அண்ணாத்துரையின் இதயக்கனியாக மாறினார். கட்சி பிரசாரங்களில் ஈடுபட்டார். சினிமாவில் நல்ல நல்ல கருத்துகளை சொல்லி, மக்கள் மனங்களில் அவரை பற்றிய நல்ல எண்ணங்களை விதைத்தார்.

- Advertisement -

ஆக, ஒரு கட்டத்தில் தனது 60வது வயதில் திமுகவில் இருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கி சட்டசபை தேர்தலை சந்தித்த எம்ஜிஆர், பெருவாரியான ஓட்டுகள் வித்யாசத்தில், தமிழகத்தில் வெற்றி பெற்றார். இதே போல் மூன்றுமுறை வெற்றி நாயகனாக தேர்தலை சந்தித்து முதலமைச்சரானார். இதில் 3வது முறை, அவர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது வென்றது, இப்போது தமிழக அரசியல் வரலாற்றில் சாதனையாக ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.

இப்போது விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியலில் குதித்திருக்கிறார். எம்ஜிஆர் மக்களிடையே பெற்ற வரவேற்பை போலவே விஜய்க்கும் அமோக வரவேற்பு இருக்கிறது. அவரது கட்சியில் சேர, செயலி அறிமுகப்படுத்தியவுடன் 3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருப்பதே மிகப்பெரிய சரித்திர சாதனையாக தான் பார்க்கப்படுகிறது. அதுவும் இன்னும் அவரது கட்சி கொள்கை, கோட்பாடுகளையே அறிவிக்கவில்லை.

- Advertisement -

சினிமாவை பொருத்த வரை விஜய், எம்ஜிஆரை போல மக்கள் நலன் சார்ந்த, அரசியல் கருத்துகள் நிறைந்த படங்களில் நடிக்கவில்லை. அவரது படங்கள் துவக்கத்தில் காதலை மையப்படுத்திய படங்களாக இருந்தன. அதன்பிறகு ஆக்‌ஷன் ஹீரோவாக அவர் நடித்தார். பல அதிரடி படங்களை தந்தார். அதனால் சினிமாவில் எம்ஜிஆர் பாணி வேறு, விஜய் பாணி வேறாகவே இருந்திருக்கிறது.

ஆனால் தமிழக அரசியலில் விஜய், எம்ஜிஆரை போல பல ஆண்டுகள் தோல்வியே காணாத நிரந்தர ஆட்சி நடத்த வேண்டும் என ஆசைப்படுகிறார். அப்படி என்றால், இங்கே விஜய் பார்மூலா என்பது, புரட்சித்தலைவரின் பார்மூலாவாக இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஏனெனில் எம்ஜிஆர் நடத்தியது மக்களாட்சி. ஆயிரத்தில் ஒருவன் படத்தில், தலைவன் என்கிற பெயரில் மக்களின் அடிமை நான் என வசனம் பேசிய எம்ஜிஆர், அரசியலில் நிஜத்திலும் அதையே பின்பற்றினார். அதே வழியில் விஜய் சென்றால், அவரும் வருங்காலத்தில் ஒரு எம்ஜிஆராக புகழ் பெறலாம்.

- Advertisement -

சற்று முன்