தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் 4 பேரில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், அடுத்து அஜீத்குமார் என்ற வரிசையில் விஜய் தான் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் டாப் ஸ்டார் 1 நடிகராக இருந்து வருகிறார். அடுத்த நடிக்க உள்ள விஜய் 69 படத்துக்கு ரூ. 250 கோடி சம்பளம் என தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில், திடீரென தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த நடிகர் விஜய், வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும். ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகம், சாதி மதம் பேதமற்ற சமுதாய முன்னேற்றம் என்ற அடிப்படையை கொண்டு ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற தாரக மந்திரத்துடன் அரசியலுக்குள் குதித்துள்ளார்.
காமராஜர், அண்ணாத்துரை, எம்ஜிஆர் இருந்த காலகட்டத்தில் தலைவர்களுக்காக மக்கள் தேர்தலில் ஓட்டுப் போட்டனர். அந்த தலைவர்களும் மக்கள் நலன் கருதியே, தங்களது ஆட்சியை நடத்தினர். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அதில் மக்களுக்கு கிடைக்கும் நன்மையே, முதலில் பார்க்கப்பட்டு, அதன்பின் செயல்படுத்தப்பட்டது. அதனால்தான் அவர்கள் மக்களின் முதல்வர்களாக இருந்தனர்.
அதன்பிறகு விஞ்ஞான முறையில் ஊழல் என்ற பெருமைக்குரிய ஆட்சி நடத்திய கருணாநிதி, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற ஜெயலலிதா, அனைத்து குடும்ப பெண்களுக்கும் ரூ. 1000 மாதம் உரிமைத்தொகை என அறிவித்துவிட்டு ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலின், ஊழலில் திளைத்து பெயர் வாங்கிய திமுக, அதிமுக அமைச்சர்கள் என, தமிழக அரசியல் போக்கு வேற லெவலில் இருந்து வருகிறது.
இதற்கிடையே தேர்தலில் ஓட்டுக்கு ரூ. 200, ரூ. 500, ரூ. 1000 என ஓட்டுகளை விலைக்கு வாங்கும் அதிமுக, திமுக கட்சிகளால் தேர்தல் என்றாலே, ஓட்டுக்கு இவ்வளவு பணம் கிடைக்கும் என்ற மனநிலைக்கு பெரும்பாலான மக்கள் மாறிவிட்டனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசி குறையாது. மக்கள் திண்டாட்டம் தீராது என்ற நிலையில், கிடைக்கிறது லாபம் என்றுதான் பலரும் ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொள்கின்றனர்.
அதனால், பலமுறை ஆட்சியில் இருந்து பல ஆயிரம் கோடிகளை கைவசம் வைத்துள்ள அதிமுக, திமுக கட்சியினர் சட்டசபை தேர்தலை வழக்கம் போல பணபலம் கொண்டு எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். இதில், தனது படங்களால் ரசிகர்களிடம் பெற்ற செல்வாக்கை நம்பிக் கொண்டு விஜய், முதல்வர் நாற்காலியை குறி வைக்கிறார். ஓட்டுக்கு பணம் கொடுத்து, மக்களின் ஆதரவை திரட்டுகிற திராவிட கட்சிகள் முன்னால் விஜய் நிற்க கூட முடியாது என அதிமுக, திமுக கட்சியினர் கெத்து காட்டி வருகின்றனர்.





