- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் சொன்ன அந்த கருத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டுமே சொந்தம், யாரையும் குறிப்பிடுபவை அல்ல -...

நான் சொன்ன அந்த கருத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டுமே சொந்தம், யாரையும் குறிப்பிடுபவை அல்ல – விளக்கம் தந்த நடிகர் விஜய் சேதுபதி!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் பேசிய போது கூறிய ஒரு பொதுவான கருத்தை எடுத்துக்கொண்டு, எங்கள் தலைவர் விஜயை தான் லீடர்ஷிப் தெரியாதவர், ஓடி ஒளிபவர், மக்களை ஏமாற்றுபவர் என்று விஜய் சேதுபதி பேசி விட்டார் என்று கடந்த ஒரு வாரமாக தவெகவினர் கொந்தளித்து போய் அவரை விமர்சித்து வந்தனர்.

ஆனால் விஜய் டிவி நிர்வாகம், விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துகள் யாரையும் குறிப்பிட்டு பேசியது அல்ல, அது பிக்பாஸ் நிகழ்ச்சி சார்ந்தது மட்டுமே என விளக்கமும் தந்தது. எனினும் விஜய் சேதுபதி லீடர்ஷிப் குறித்து பேசிய கருத்துகளுக்கு விஜய்தான் மிக பொருத்தமானவர் என்று அவரது கட்சியினரே விஜயை அசிங்கப்படுத்திய கூத்து ஒரு வாரமாக நடந்தது.

- Advertisement -

பிக்பாஸ் வீட்டுக்குள் ஜனநாயகம் என்ற கான்செப்டில் நடந்து வரும் நிகழ்ச்சியில் லீடர் என்றால் என்ன லீடர்ஷிப் என்றால் என்ன என்ற விஜய் சேதுபதியின் கருத்து மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அந்த விமர்சனத்துக்கு தகுதியானவர் விஜய் என்பது கடந்த கால நிகழ்வுகள் மூலம் நிரூபணமானதால் அதை தவெக வினரே நேரடியாக ஏற்றுக்கொண்டதே இதற்கு முக்கிய காரணமாகும்.

எனினும் இது நிகழ்ச்சி சார்ந்த ஒரு கருத்தாக மட்டுமே பேசப்பட்டது என்றாலும் விஜய் சேதுபதிக்கு எதிராக தவெகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். அதே நேரத்தில் விஜய் சேதுபதி கூறிய விமர்சனம் போல எங்கள் தலைவர் இல்லை, அந்த விமர்சனங்கள் அவருக்கு பொருந்தாது என்று ஒருவர் கூட மறுத்து பேசாமல், எப்படி அவர் அப்படி பேசலாம் என்றுதான் கேள்வி எழுப்பி கோபத்தை வெளிப்படுத்தி காமெடி செய்தனர்.

- Advertisement -

அதாவது எங்கள் தலைவர் விஜய் தலைமை பண்பு இல்லாதவர், தலைவர் பொறுப்புக்கு தகுதியற்றவர் என்று நீங்கள் பேசியதுதான் தவறு, நீங்கள் பேசிய கருத்து தவறானது அல்ல என்கிற கோணத்தில் தான் தவெகவினரின் கோபமும் ஆதங்கமும் இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறினர். எனினும் விஜய் டிவியை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும் அதற்கு இன்று விளக்கம் தந்துள்ளார்.

இன்று வெளியான தமிழ் பிக்பாஸ் சீசன் 10 பிரமோ வீடியோ ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது, இங்கு பேசப்படும் கருத்துக்கள் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் எங்களுக்கும் மட்டுமே சொந்தம். வெளியில் இருக்கும் நபரை அமைப்பை குறிப்பிடவில்லை என திட்டவட்டமாக தெரிவிக்கிறேன். கடந்த வாரமே இதை சொல்லி இருக்க வேண்டும். இப்போது சொல்ல வேண்டிய அவசியமாகிவிட்டது என்று நடிகர் விஜய் சேதுபதி அதில் பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்