- Advertisement -
Homeபொழுதுபோக்குஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? தயாரிப்பாளருக்கு நான் தந்த வாக்குறுதி - பத்தா பட...

ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? தயாரிப்பாளருக்கு நான் தந்த வாக்குறுதி – பத்தா பட விழா மேடையில் பகிரங்கமாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சீதக்காதி போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி தரணிதரன். மீண்டும் அவரது இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் பத்தா. வருகிற அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் பேசிய படத்தின் நாயகன் நடிகர் விஜய் சேதுபதியிடம் அவர் நடித்த மகாராஜா படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, மகாராஜா படம் பத்தி பேசணும் என்றால் நான் டைரக்டர் நித்திலன் சுவாமிநாதன் பற்றி தான் சொல்லணும்.

- Advertisement -

அவர் ஒரு சிறந்த இயக்குனர். அவரது எழுத்து திறமை அவ்வளவு அபாரமானது. நிறைய எழுதுவார். இப்போது மகாராஜா 2 கதையும் சொன்னார். அவ்வளவு அழகாக இருந்தது. அவருடன் இணைந்து பணியாற்றியது அவ்வளவு நன்றாக இருந்தது. ஆனால் மகாராஜா படம் இவ்வளவு தூரம் போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

படம் நன்றாக இருந்தது. படம் வெளிவந்த பிறகும் இந்த அளவுக்கு போகும் என்று யாருக்கும் நம்பிக்கை இல்லை. என்னுடைய தயாரிப்பாளர் சுதனுக்கு நன்றி. கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவர் எனக்கு போன் பண்ணி இருந்தார். அப்போது மகாராஜா படத்தை ஹாலிவுட்டுக்கு விற்று விட்டதாக சொன்னார். நிஜமாக சொல்கிறீர்களா? யார் வாங்கி இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக கேட்டேன்.

- Advertisement -

அவரிடம் அந்த படத்தில் யார் நடிக்கிறார்கள் என்று கேட்டபோது அவர் மேத்யூ மெக்கானிகா பெயரைச் சொன்னார். உடனே நான் அந்த படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் வாங்கிக் கொடுங்கள். அடுத்து நான் ஒரு படம் சம்பளமில்லாமல் உங்களுக்கு நடித்து தருகிறேன் என்று அவரிடம் சொன்னேன்.

எனக்கு ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. அது நடக்குமா என்று தெரியாது. ஆனால் நான் நடித்த படம் ஹாலிவுட் போவதில் எனக்கு மகிழ்ச்சியே. அனைத்து பெருமையும் இயக்குனர் நித்திலனையே சேரும். நன்றி. ஐ லவ் யூ என்று நடிகர் விஜய் சேதுபதி அந்த விழாவில் பேசியிருக்கிறார். மகாராஜா படம் ஹாலிவுட் படமாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை ரூ. 15 கோடி விலை கொடுத்து ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது.

- Advertisement -

சற்று முன்