- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் போட்ட திடீர் உத்தரவு, பார்வையாளர்களுக்கு ஏற்பட்ட கடும் அதிர்ச்சி - கிளிப்பிள்ளையாக...

விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் போட்ட திடீர் உத்தரவு, பார்வையாளர்களுக்கு ஏற்பட்ட கடும் அதிர்ச்சி – கிளிப்பிள்ளையாக மாறிய சேது இனி எடுபடுவாரா?

- Advertisement -

விஜய் டிவியில் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 நடந்து வருகிறது. கடந்த ஆண்டு வரை இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்த வழங்கி வந்த நிலையில் இப்போது நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த மாதம் 6ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி இப்போது 6வது வாரத்தில் உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீபாவளி நேரத்தில் ஒரு வாரம் எலிமினேஷன் இல்லை என பிக்பாஸ் அறிவித்தார். இப்போது பழைய போட்டியாளர்கள் 14 பேர், வைல்டு கார்டு போட்டியாளர்கள் 5 பேர் என 19 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர்.

- Advertisement -

நடிகர் ரஞ்சித், முத்துக்குமரன், அருண் பிரசாத், தீபக், விஷால், சத்யா, ஜெப்ரி, சாச்சனா, அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்ட 19 பேர், போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இனி புதிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற எகத்தாளமான ஒரு சிரிப்புடன் பிக்பாஸ் வீட்டுக்குள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பும் முதல் நாளிலேயே, நடிகர் ரஞ்சித்தை நோஸ்கட் செய்து பரபரப்பு ஏற்படுத்தினார். மேலும் வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் போட்டியாளர்களை நேரடியாக தாக்கி பேசினார்.

- Advertisement -

குறிப்பாக அருண் பிரசாத்தை குங்குமப்பூ என்றார். ஜாக்குலினை கிண்டல் செய்தார். ரஞ்சித்தை கலாய்த்தார். போட்டியாளர்களின் கேரக்டர்களை நேரடியாக விமர்சித்து பேசி அவர்களை அவமானம் செய்தார் என்றே பார்வையாளர்கள் மத்தியில் முகச்சுளிப்பு ஏற்பட்டது. ஆனால் கமல்ஹாசனை ஒரு போதும் இப்படி போட்டியாளர்களை நேரடியாக விமர்சனம் செய்தது இல்லை எ்ன்றும் விமர்சனம் எழுந்தது.

இந்த விமர்சனங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நெகடிவ் அதிகரித்தை அடுத்து, விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் சில நிபந்தனைகளை உத்தரவிட்டுள்ளார். நாங்கள் என்ன சொல்லி தருகிறோமோ, எப்படி பேச சொல்கிறோமோ அதை மட்டும் மேடையில் பேசுங்கள். தேவையின்றி உங்கள் விமர்சனங்களை, உணர்வுகளை வெளிப்படுத்தாதீர்கள் என்று கூறிவிட்டார். அதனால் அடக்க வாசிக்க துவங்கியிருக்கிறார் விஜய் சேதுபதி.

- Advertisement -

சற்று முன்