நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் துணை நடிகராக சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து பின், தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம், நாயகனாக அறிமுகமானவர். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், பீட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களால் முன்னணி நடிகராக வந்தவர்.
ஹீரோவாக அவர் நடித்த தர்மதுரை, கருப்பன், சேதுபதி, ரெக்க, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து வில்லனாகவும் நடித்த முற்பட்டார். பேட்ட, விக்ரம், மாஸ்டர் போன்ற படங்களில் வில்லன் நடிப்பிலும் விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து. ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும் வில்லனாக விஜய்சேதுபதி நடித்துவிட்டார்.
தமிழ் சினிமாவை பொருத்தவரை, நடிகர்கள் ஒரே மாதிரியான ஜானரில் பயணிக்க வேண்டும். ஹீரோ அல்லது, வில்லன் இரண்டும் இல்லையென்றால் குணசித்திர பாத்திரங்கள் என அவரவர் தகுதிநிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ரஜினி, கமல் போன்றவர்கள் இன்னும் ஹீரோ என்ற நிலையில் இருந்து இறங்காமல் நடித்துவருவது, தங்களது இமேஜை எத்தனை வயதானாலும் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு முயற்சிதான்.
ஆனால் விஜய் சேதுபதி அடிக்கடி தனது திரைப்பயண பாதையை மாற்றிக்கொள்வது அவரது தோல்விகளுக்கு மிக முக்கிய காரணமாகிறது.சில படங்களில் வில்லன், சில படங்களில் கதாநாயகன் என இரட்டை குதிரை அவர் சவாரி செய்வது, ரசிகர்களை அலுப்படைய செய்து வருகிறது. அதனால் தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டன.
பல படங்களில் அவரை நடிக்க அழைக்காமல் இருப்பதற்கு காரணம், அவரது இரட்டை நிலைப்பாட்டால் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. ஒரு ஹீரோ நடிகருக்கு ரசிகராக இருப்பதுதான் பலருக்கும் பிடிக்கும். வில்லன் நடிகரின் ரசிகர் என்பதை பலரும் விரும்பவும் மாட்டார்கள். வெளியிலும் சொல்ல தயங்குவர் என்ற நிலையில், விஜய் சேதுபதி படங்கள், அவரது ரசிகர்களுக்கே சமீபமாக பிடிப்பதில்லை.
அதனால் இனி தமிழில் தன்னால் பெரிய அளவில் ஜொலிக்க முடியாது என்று முடிவெடுத்துவிட்ட விஜய் சேதுபதி, பாலிவுட் பக்கமாக ஒதுங்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அங்கு பலமடங்கு சம்பளம் அதிகமாக கிடைக்கிறது. அவர் இந்தியில் நடித்த மேரி கிறிஸ்துமஸ் என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தின் ரிசல்ட் நல்ல விதமாக இருந்தால், தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்கும் முடிவுக்கு விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.





