விஜய் டிவியில் இப்போது தமிழ் பிக்பாஸ் சீசன் 10 நடந்து வருகிறது. கடந்த வாரம் 6ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி இப்போது ஒரு வாரம் கடந்திருக்கிறது. இதில் 19 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். நடிகர் பிளாக் பாண்டி உடல் நல பாதிப்பு காரணமாக அவரே வெளியேறி விட்டார்.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சிக்கு வந்து பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்து பேசுவது வழக்கமாக உள்ளது. அந்த வாரத்தில் வீட்டுக்குள் நடந்த பிரச்னைகள், போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட மனக் கசப்புகள் உள்ளிட்டவை குறித்து அவர் வீட்டுக்குள் இருப்பவர்களுடன் கலந்து பேசுவது நடைமுறையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் சேதுபதி, இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் தலைவராக செயல்பட்டவர் குறித்து வெளிப்படையாக தனது கருத்துகளை தெரிவித்தார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள், அப்படியே இப்போதைய முதல்வர் விஜயை சுட்டிக் காட்டும் விதமாக இருந்ததால் இணையத்தில் அது வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியதாவது, லீடர்ன்னா என்னன்னே தெரியாம லீடர் ஷிப்புன்னா என்னன்னே தெரியாம வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துட்டு பிரச்னைகளும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல பழியை தூக்கிப் போட்டுட்டு இல்லே அங்க தெறிச்சு ஓடறதுங்கறது லீடருக்கான குவாலிட்டி இல்லே. அது ஏமாற்றுவேலை என்று விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.
அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் தமிழக முதல்வர் விஜய் குறித்து மறைமுகமாக சொல்லப்பட்ட வார்த்தைகளாகவே இருக்கின்றன என்று மக்கள் விஜய் சேதுபதியை பாராட்டி வருகின்றனர். ஏனெனில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி விட்டு, எதற்கெடுத்தாலும் திமுக மீது பழிபோடுவதே முதல்வர் விஜயின் வழக்கமாக இருந்து வருகிறது.
தேர்தல் பிரசாரத்திலும் சரி இப்போது ஆட்சிக்கு வந்த பின்னாலும் சரி திமுகவை மட்டுமே குறை சொல்லும் விஜய், தனது பொறுப்பு என்ன பதவி என்ன எதற்காக ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்து விட்டு மக்களை ஏமாற்றி வருகிறார் என்பதையே விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியின் வாயிலாக அழுத்தமாக தனது கருத்துகளை வெளிப்படுத்தி விட்டார் என்று தமிழக மக்கள் விஜய் சேதுபதியை பாராட்டி வருகின்றனர்.





