- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யாவுக்கு பதிலடியாக அப்படி சொன்னாரா நடிகர் சிவகார்த்திகேயன்? - சூரி படத்துக்கு பின்னால்...

நடிகர் சூர்யாவுக்கு பதிலடியாக அப்படி சொன்னாரா நடிகர் சிவகார்த்திகேயன்? – சூரி படத்துக்கு பின்னால் இப்படியும் ஒரு சர்ச்சையா?

- Advertisement -

நடிகர் கார்த்தி நடித்த சர்தார் 2 படமும் நடிகர் சூரி நாயகனாக நடித்த மண்டாடி படமும் கடந்த 10ம் தேதி வெளியானது. 2 படங்களுமே கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த 2 படங்களையுமே ஒரு தரப்பு ரசிகர்கள் ஆஹா ஓஹோ என்கின்றனர். ஒரு தரப்பு ரசிகர்கள் முடியலைடா சாமி என்று கையெடுத்து கும்பிடுகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூரி நடித்த மண்டாடி படத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துகள் தெரிவித்து ஒரு பதிவை தனது வலைதள பக்கத்தில் செய்திருந்தார். அதில் நல்ல கண்டென்ட் உள்ள படம் கண்டிப்பாக ஜெயிக்கும் என்று அவர் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

- Advertisement -

இதுதான் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கார்த்தி நடித்த சர்தார் படமும் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படமும் ரிலீஸானது. அந்த நேரத்தில் நடிகர் சூர்யா, தனது தம்பி கார்த்தி நடித்த சர்தார் படத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்து டிவீட் செய்திருந்தார்.

அப்போது அவர் நல்ல கண்டென்ட் உள்ள படம் கண்டிப்பாக ஜெயிக்கும் என்று கூறியிருந்தார். இப்போது நடிகர் சூர்யா சொன்ன அதே ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி நடிகர் சூரி படத்துக்கு சிவகார்த்திகேயன் பதிவு செய்திருப்பதால் நடிகர் சூர்யாவுக்கு அவர் சரியான பதிலடி தந்து விட்டார் என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

- Advertisement -

வழக்கமாக தனது அண்ணன் சூர்யா நடிக்கும் படங்கள் ரிலீஸ் நேரத்தில் நடிகர் கார்த்தியும், அதே போல் தனது தம்பி கார்த்தி நடிக்கும் படங்கள் ரிலீஸ் நேரத்தில் நடிகர் சூர்யாவும் வாழ்த்துகளை தெரிவிப்பது வழக்கமாக உள்ளது. அந்த அடிப்படையில் நல்ல கண்டென்ட் உள்ள படம் ஜெயிக்கும் என்று சூர்யா பொதுவாக சொல்லியிருக்கிறார்.

அதே அர்த்தத்தில் தான் நடிகர் சிவகார்த்திகேயனும் தனது நண்பர் சூரி நடித்த மண்டாடி படத்துக்கும் வாழ்த்துகளை கூறியிருக்கிறார். அதே நேரத்தில் கார்த்தி நடித்த சர்தார் 2 படத்துக்கும் சிவகார்த்திகேயன் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். அதை கவனிக்காமல் நடிகர் சூர்யாவை நடிகர் சிவகார்த்திகேயன் பழிவாங்கி விட்டார் என்ற சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளனர். இந்த விவகாரத்தால் இப்போது சூர்யா ரசிகர்களுக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் தேவைற்ற மோதல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்