நடிகர் அஜீத்குமாரின் சமீபத்திய செயல்பாடுகள் அவரது ரசிகர்களை நொந்து போக செய்துள்ளது. தொடர்ந்து முதல்வர் விஜய் குறித்து அவர் பாராட்டுகளை தெரிவிப்பதும் அவரை லண்டனுக்கு வரவழைத்து அவர் பங்கேற்கும் கார் ரேஸ் போட்டியை கொடியசைத்து துவக்கி வைக்க செய்திருப்பதும் ஏகே ரசிகர்களை அப்செட் ஆக செய்துள்ளது.
சினிமாவில் இருவரும் போட்டி நடிகர்களாக இருந்த போது அஜீத்குமாருக்காக விஜய் ரசிகர்களுடன் மல்லு கட்டியவர்கள் ஏகே ரசிகர்கள். அஜீத்குமார் நடித்த படங்கள் வரும்போது அந்த படங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக போஸ்டர் ஒட்டி தோரணம் கட்டி வலைதளங்களில் அந்த படத்தை பிரமோசன் செய்தவர்கள் அஜீத்குமார் ரசிகர்கள்.
ஆனால் இன்று அதை எல்லாம் மறந்துவிட்டு தனது ரசிகர்களை பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் முதல்வர் விஜயுடன் அஜீத்குமார் நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார். தொடர்ந்து அவரை பாராட்டி பேசி வருகிறார். இதுதான் சுயநலத்தின் ஒட்டுமொத்த உருவம். தன்னை சுயநலவாதி என்பது ஏகே நிரூபித்து விட்டார் என்று அவரது ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.
பழம்பெரும் பாடகர் எஸ்பிபி இறந்தார். அதற்கு அஜீத்குமார் அறிக்கை விடவில்லை. கேப்டன் விஜயகாந்த் மறைந்தார். அதற்கு அஜீத் இரங்கல் தெரிவிக்கவில்லை. அஜீத்குமாருடன் பல படங்களில் நடித்த விவேக் இறந்தார். மயில்சாமி இறந்தார். அவர்கள் மறைவுக்கு எல்லாம் ஒரு அறிக்கை கூட அஜீத்குமார் விடவில்லை.
சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா இறந்து போனார். அதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. இயக்குனர் கே பாக்யராஜ் மறைந்து போனார். அதற்கும் அஜீத்குமார் வருத்தம் தெரிவிக்கவில்லை. சினிமா துறை சார்ந்தவர்கள் முக்கியமானவர்கள் மறைவுக்கு எல்லாம் ஒரு அறிக்கை கூட விடாத ஒரு வருத்தம் கூட தெரிவிக்காத நடிகர் அஜீத்குமார், சட்டசபையில் முதல்வர் விஜய் தனது ஸ்போர்ட்ஸ் துறை சார்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டதும் உடனே நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்து அறிக்கை வெளியிடுகிறார்.
அஜீத்குமார் வளர்ந்ததே சினிமாவில் நடித்துதான். அந்த துறை சார்ந்த பெரிய ஜாம்பவான்கள் இறந்த போது ஒரு இரங்கல் அறிக்கை வெளியிட நேரம் இல்லாத அஜீத்குமார், சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் மோட்டார் சிட்டி அமைக்கப்படும் என்று சட்டசபையில் விஜய் அறிவித்தவுடன் உடனே நன்றி தெரிவிக்கிறார் என்றால், அவர் துறை சார்ந்த ஒரு விஷயம் நடக்கிறது என்றவுடன் பாராட்டுகிறார் என்றால் இதுதான் சுயநலத்தின் மொத்த உருவம் என்பதற்கு அடையாளம் என்று ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர்.





