- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, சூது கவ்வும் படத்துல விஜய் சேதுபதி நடிச்ச கேரக்டர்ல முதல்ல நடிக்க இருந்தது இவரா,...

என்னது, சூது கவ்வும் படத்துல விஜய் சேதுபதி நடிச்ச கேரக்டர்ல முதல்ல நடிக்க இருந்தது இவரா, கதை பிடிக்கலேன்னு சொல்லிட்டாரா? – சும்மா காமெடி பண்ணாதீங்கப்பா

- Advertisement -

விஜய் சேதுபதி துணை நடிகராக சில காட்சிகளில் தோன்றி பின்புதான் கதாநாயகனாக மாறினார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களில் சில காட்சிகளில் வருவார். இப்போது அந்த படங்களை பார்த்தால்தான், அட நம்ம விஜய் சேதுபதியா என ரசிகர்களுக்கு ஆச்சரியமாக தோன்றும்.

அப்படி வளர்ந்து வந்த காலகட்டத்தில் சூதுகவ்வும் படம் விஜய் சேதுபதிக்கு ஒரு பிரேக்கிங் படமாக அமைந்தது. தாஸ் என்ற கேரக்டரில் கடத்தல் டீமின் தலைவராக இதில் நடித்திருப்பார். நரைத்த தாடி, மீசை கருப்பு நிற பெரிய கண்ணாடி அணிந்து செம மிரட்டலாக படத்தில் காணப்படுவார்.

- Advertisement -

ஆனால் அவர் பேச ஆரம்பித்துவிட்டால் பயங்கர டம்மி பீஸ் என்பது சில விநாடிகளில் புரிந்துவிடும். அந்த அளவுக்கு அப்பாவியாக இருப்பார். கடத்தல் தொழில் செய்தாலும் அதில் பல நியாய தர்மங்களை கடைபிடிப்பார். பேங்க் மேனேஜரின் பெண்ணை கடத்திவிட்டு, அவரிடம் மிரட்டி பணம் கேட்கும்போது இந்த பணத்தை தருவதால், உங்கள் குடும்பம் ஒன்றும் இந்த மாதம் கஷ்டப்படாது இல்லே, சமாளிச்சுக்குவீங்க தானே என்றும் கேட்டுக்கொள்வார்.

கடந்த 2013ம் ஆண்டில் அறிமுக இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி உடன் பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், ராம் திலக், சஞ்சிதா ஷெட்டி, ராதா ரவி, எம்எஸ் பாஸ்கர், முனிஷ்காந்த் என பல முக்கிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் ரூ. 2 கோடி செலவில் எடுக்கப்பட்டு, ரூ. 35 கோடியை வசூலித்து மிகப்பெரிய வெற்றியடைந்தது.

- Advertisement -

பிளாக் காமெடி க்ரைம் திரில்லர் படமாக, கேங்ஸ்டர் கதையாக உருவாக்கப்பட்ட இந்த படத்தை இப்போதும் ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். இந்த படம் வெளியாக 10 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் சூதுகவ்வும் 2ம் பாகம் எடுப்பது குறித்து இயக்குநர் நலன்குமாரசாமி திட்டமிட்டு வருகிறார்.

சூது கவ்வும் படத்தில் தாஸ் கேரக்டரில் நடித்த பிறகு, விஜய் சேதுபதி குறித்தான பார்வை அதிகமாக அவர் பக்கம் திரும்பியது. அதன் பிறகுதான் பல படங்களில் நடிக்க அவர் கமிட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் வடிவேலுதான். அவர் கதை பிடிக்கவில்லை என்று கூறியதால்தான் அந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்