- Advertisement -
Homeபொழுதுபோக்குஏதே… 96 படத்தின் 2ம் பாகத்தில் ஹீரோவா விஜய் சேதுபதி நடிக்கலையா? டிராகன் பட ஹீரோவிடம்...

ஏதே… 96 படத்தின் 2ம் பாகத்தில் ஹீரோவா விஜய் சேதுபதி நடிக்கலையா? டிராகன் பட ஹீரோவிடம் பேச்சு வார்த்தை நடக்குதா? – என்னய்யா சொல்றீங்க?

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஆனால் அவர் புதுமுக நடிகராக பல படங்களில் நடித்து வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு மிகப்பெரிய அடையாளங்களை வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்த சில படங்கள் இருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமான ஒரு படம்தான் 96 படமாகும்.

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை திரிஷா மற்றும் தேவதர்ஷினி ஜனகராஜ் பகவதி பெருமாள் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை நந்தகோபால் என்பவர் தயாரித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படமாக இருந்தது.

- Advertisement -

குறிப்பாக ராம் கேரக்டரில் விஜய் சேதுபதியும் ஜானு கேரக்டரில் திரிஷாவும் இந்த படத்தில் வாழ்ந்திருந்தனர். பள்ளியில் காதலித்த மாணவி, திருமணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆகி விடுகிறார். பிறகு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் சக மாணவ மாணவிகளை நேரில் சந்திக்க வருகிறார். அப்போது ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களே இந்த படத்தின் கதைக்களமாக இருந்தது.

இதில் பள்ளி நாட்களில் விஜய் சேதுபதி, திரிஷாக எம்எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும், கெளரி ஜி கிசானும் நடித்திருந்தனர். தேவதர்ஷினி கேரக்டரில் பள்ளி மாணவியாக அவரது மகள் நியாதி கடம்பியே நடித்திருந்தார். ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இந்த படம் எப்போது 2ம் பாகமாக வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

- Advertisement -

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் 96 படத்தின் 2ம் பாகத்தை தயாரிக்க உள்ளார். ஆனால் இந்த 2ம் பாகம் படத்தின் கதையை கேட்ட நடிகர் விஜய் சேதுபதி, தனக்கு கதை பிடிக்கவில்லை. இந்த படத்தில் ஆர்வமில்லை என்பது போன்ற ரியாக்சனை டைரக்டர் பிரேம்குமாரிடம் காட்டியிருக்கிறார். 2ம் பாகத்தில் காதலி திரிஷாவை தேடி விஜய் சேதுபதி சிங்கப்பூர் செல்வது போன்ற கதைக்களத்தில் படம் இருப்பதாக தெரிய வருகிறது.

96 படத்தின் 2ம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க மறுத்த நிலையில், அந்த கேரக்டரில் நடிக்க டிராகன் பட ஹீரோ பிரதீப் ரங்கநாதனிடம் அந்த கதையில் நடிக்க கேட்டுள்ளனர். கதையை கேட்டு மிகவும் பிடித்து போய்விட்டதாக கூறிய பிரதீப், ஆனால் இப்படிப்பட்ட ஒரு பவித்திரமான கேரக்டரில் நான் நடித்தால் நன்றாக இருக்காது. வீட்டுக்கு அடங்காத பையனாக நான் நடித்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள். இந்த கேரக்டரில் நான் நடித்தால் சரியாக வராது என்று மறுத்திருக்கிறார். இப்போதைக்கு 96 படம் 2ம் பாகத்துக்கு யார் ஹீரோ என்பதில் பலத்த குழப்பம் நிலவுகிறது.

- Advertisement -

சற்று முன்