நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது அவரது 50வது படமாக வெற்றிக்கனியை பறித்தது. குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த ஆண்டில் வெளியான 100 கோடி ரூபாய் வசூல் பாக்ஸ் ஆபீஸ் லிஸ்ட்டில் மகாராஜா படமும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதில் பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் அவர் நடிக்கிறார். நித்யாமேனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், வில்லனாக மிஷ்கின் நடிப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி தென்காசி மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.
விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை அவர் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெற அமெரிக்கா சென்றுவிட்டார். 45 நாட்களாக அங்கு தங்கி அவர் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெற்று வருகிறார். ஜனவரி முதல் வாரத்தில் கமல் திரும்ப வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி, பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் நல்ல முறையில் கொண்டு சென்றாலும், நாளடைவில் அவரது தொகுப்பாளர் பணியில் அவ்வளவு சிறப்பு இல்லை, குறிப்பாக கமல்ஹாசனை போல பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதியால் சுவாரசியமாக நடத்த முடியவில்லை. கமலை போன்ற பேச்சாற்றலை அவரிடம் காண முடியவில்லை என்று ஓப்பனாக விமர்சித்து வருகின்றனர்.
அதனால் அடுத்த 2025ம் ஆண்டில் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்று அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில நிர்வாகியே சமீபத்தில் கூறியது இணையத்தில் வைரலானது. அதனால் ஜனவரி மாதம் 15ம் தேதிக்கு பிறகு பிக்பாஸ் முடிவடைந்த பிறகு நடிப்பில் முழு கவனம் செலுத்த விஜய் சேதுபதி திட்டமிட்டுள்ளார்.
இதில் இப்போது லேட்டஸ்ட் தகவலாக, விஜய் சேதுபதி ஆரம்பத்தில் நடித்த போது அவரை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரிக்க உள்ளார். வரும் ஜனவரி 16ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, ஜனவரி 18ம் தேதி விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.





