- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலகம் முழுவதும் ரூ. 305 கோடிகளை கடந்து சென்ற தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம்...

உலகம் முழுவதும் ரூ. 305 கோடிகளை கடந்து சென்ற தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் 5 நாட்கள் வசூல் சாதனை – மாநிலம் வாரியாக தி கோட் வசூல் நிலவரம் இத்தனை கோடிகளா?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி உள்ளார். 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில் விஜய் சம்பளம் மட்டுமே ரூ. 200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தி கோட் படம் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில், இதுவரை உலகம் முழுவதும் இந்த படம் ரூ. 305 கோடி வசூலை கடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 4ம் நாள் வசூல் நிலவரம் குறித்து படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், ரூ. 288 கோடி என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. 5ம் நாளில் 305 கோடி ரூபாயை தி கோட் கடந்திருக்கிறது.

- Advertisement -

தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வெளியான கடந்த 5ம் தேதி முதல் நாளன்று 128 கோடி ரூபாய் வசூலித்தது. அடுத்த 3 நாட்களில், 160 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது. தி கோட் படம் வசூல் ரூ. 1000 கோடியை எட்ட வேண்டும் என்ற நிலையில், 5 நாட்களில் 300 கோடி ரூபாயை கடந்திருப்பதும், தொடர்ந்து படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனம் இருப்பதும் அதிக நம்பிக்கையை படக்குழுவுக்கு தந்திருக்கிறது.

கடந்த 5 நாட்களில் தி கோட் படம் 305 கோடி ரூபாயை கடந்துள்ளது. தி கோட் 5வது நாளில் இந்தியாவில் மட்டும் 18 கோடி ரூபாய் வசூலித்தது. இந்தியில் இந்த படம் ரூ. 24 கோடியை வசூலித்துள்ளது. மொத்தமாக இந்தியா முழுவதும் மொத்தம் 5 நாட்களில் மொத்தம் ரூ. 183 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளது. இதில் இந்தி மொழியில் மட்டும் தி கோட் 24 கோடி வசூலித்துள்ளது.

- Advertisement -

கடந்த 5 நாட்களில் தி கோட் வசூல் நிலவரம், தமிழ்நாட்டில் 106.4 கோடி ரூபாய், கேரளாவில் 10.3 கோடி ரூபாய், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களில் 10.1 கோடி ரூபாய், வெளிநாடுகளில் 120.15 கோடி ரூபாய், கர்நாடகா 21.35 கோடி ரூபாய் என வசூலில் சாதனை புரிந்து வருகிறது. தொடர்ந்து படத்துக்கு ரசிகர்கள் பலத்த ஆதரவு தந்து வருகின்றனர்.

விஜய் படத்துக்கு மட்டுமே தமிழ் நாட்டில் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும், ஆதரவும் இருந்து வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் 5 நாட்களில் 120 கோடி ரூபாய் மேல் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி மொழியிலும் விஜய் நடித்த தி கோட் படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்