சமீப காலமாகவே அமெரிக்கர்கள் தங்களது திரைப்படங்களில் ஆசியாவை சேர்ந்த கதாப்பாத்திரங்களை அடிப்படையாக வைத்து வெப் சீரீஸ்களை உருவாக்கி வருகின்றனர். கடந்த ஆண்டு மார்வெல் நிறுவனத்தின் “மிஸ் மார்வெல்” என்ற வெப் சீரீஸ் வெளிவந்தது. பாகிஸ்தானை வம்சாவழியாக கொண்ட அமெரிக்க வாழ் பெண் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து இந்த வெப் சீரீஸை உருவாக்கியிருந்தார்கள். இந்த வெப் சீரீஸ் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த வெப்சீரீஸில் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் இசை இடம்பெற்றிருந்தது. அந்த குறிப்பிட்ட காட்சியை இந்தியாவை சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பலரும் இனையத்தில் வைரல் ஆக்கி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது நெட்ஃபிளிக்ஸில் வெளியான ஒரு வெப் சீரீஸில் விஜய் பட பாடல் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அது எந்த வெப் சீரீஸ் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

நெட்ஃபிளிக்ஸில் மிகவும் பிரபலமான வெப் சீரீஸாக திகழ்ந்து வரும் “Never Have I Ever” வெப் சீரீஸில் ஒரு எபிசோட்டில் விஜய் நடித்த “தெறி” படத்தில் இடம்பெற்ற “என் ஜீவன்” பாடலின் இசை இடம்பெற்றிருக்கிறது. இந்த விஷயத்தை கேள்விபட்ட விஜய் ரசிகர்கள் பலரும் அந்த வெப் சீரீஸில் விஜய் பட பாடல் இடம்பெற்ற அந்த குறிப்பிட்ட காட்சியை படமெடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது. “லியோ” திரைப்படத்தை தொடர்ந்து “தளபதி 68” திரைப்படத்தில் வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளார் விஜய்.





