- Advertisement -
Homeபொழுதுபோக்குநாளை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் இந்தியன் 2 படம் இசை வெளியீட்டு விழா, டைரக்டர் ஷங்கர்...

நாளை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் இந்தியன் 2 படம் இசை வெளியீட்டு விழா, டைரக்டர் ஷங்கர் செய்யப் போகும் தரமான சம்பவம் – மேடையில் அறிமுகமாவது யார் தெரியுமா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இந்தியன் 2 படம் ஜூலை மாதம் திரைக்கு வருகிறது. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த 1996ம் ஆண்டில், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 3 படமும் எடுக்கப்பட்டுள்ள நிலையில், 2025ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு இந்தியன் 3 ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

இந்தியன் முதல் பாகத்தில் நடித்த நெடுமுடி வேணு இந்த படத்திலும் வருகிறார். அவர் இந்தியன் 2 படப்பிடிப்புக்கு முன்பே மறைந்த நிலையில், ஏஐ தொழில் நுட்பத்தில் இந்த படத்தில் வருகிறார். அதே போல், இந்தியன் 2 படத்தில் சில காட்சிகளில் நடித்த சின்னக் கலைவாணர் விவேக்கும் திடீரென மறைந்த நிலையில், அவரது காட்சிகளும் ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியன் 2 படத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை, ( 1ம் தேதி) மாலை சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இந்த விழாவில் கமல்ஹாசன், டைரக்டர் ஷங்கர், படத்தின் இசையமைப்பாளர் அனிரூத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

- Advertisement -

டைரக்டர் ஷங்கருக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருக்கிறார். இதில் மகள் ஐஸ்வர்யாவுக்கு, சமீபத்தில் 2வது திருமணம் நடந்தது. மற்றொரு மகள் அதிதி ஷங்கர் ஏற்கனவே விருமன், மாவீரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும், ஏகப்பட்ட விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நாளை நடக்கும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. அதில் அதிதி ஷங்கர் பங்கேற்று, பெர்பாமென்ஸ் காட்ட இருக்கிறார். அதே போல், ஷங்கரின் மகனும் மேடையில் தோன்றி, தனது திறமையை வெளிப்படுத்த உள்ளார். இப்படி, தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மகனை மேடையில் ஏற்றுவதன் மூலம், என் வீட்டிலும், ஒரு ஹீரோ இருக்கிறார் என்று டைரக்டர் ஷங்கர், மற்ற இயக்குனர்களுக்கு சூசகமாக சொல்கிறாரோ என பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்