- Advertisement -
Homeபொழுதுபோக்குநாளை முதல்வராக பதவியேற்கும் தவெக தலைவர் விஜய் - விழாவில் பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் -...

நாளை முதல்வராக பதவியேற்கும் தவெக தலைவர் விஜய் – விழாவில் பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் – அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் தமிழக கவர்னர் (பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்று விஜய்க்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும் தமிழக அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். திரை பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.

நாளை விழாவில் விஜய் தமிழக முதல்வராக பங்கேற்க உள்ளார். அவருடன் செங்கோட்டையன் – பொதுப்பணித்துறை நிர்மல்குமார் – மின்சாரத் துறை ஆதவ் அர்ஜூனா – விளையாட்டு மற்றும் மதுவிலக்கு அருண்ராஜ் – வணிக வரித்துறை புஸ்லி ஆனந்த் – நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட 9 முக்கிய நிர்வாகிகள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தந்த காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இவை உத்தேச பட்டியலாக தான் உள்ளன. தவெக தரப்பில் அதிகாரபூர்வமான அமைச்சர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை தவெக தலைவர் விஜயுடன் ஆதவ் அர்ஜூனா நிர்மல்குமார் புஸ்லி ஆனந்த் ஆகியோர் ஆளுனர் மாளிகைக்கு சென்ற நிலையில் அவர்களுடன் காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் சென்று விஜய்க்கு தங்களது ஆதரவு நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினர்.

முறைப்படி தவெக தலைவர் விஜய்க்கு தமிழக ஆளுனர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் முதல்வர் பதவியேற்பு விழா நடப்பதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த விழாவிற்கு பின்பு விஜய் முதல்வராக தலைமை செயலகம் செல்ல வாய்ப்புள்ளது.

சற்று முன்