சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கதாநாயகனாக நுழைந்த ஒரு சில பிரபலங்களின் வரிசையில் நடிகர் கவினும் முக்கிய ஒருவர். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான தொடரில் முக்கிய கதாநாயகனாக வலம் வந்த கவின் தற்போது தமிழ் திரையுலகில் நம்பக்கூடிய கதாநாயகர்களில் ஒருவராக அவரது வெற்றிகளின் மூலம் வளர்ந்துள்ளார். அந்த வகையில் அண்மையில் அவரது நடிப்பில் வெளியான டாடா படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்று அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததுடன், வசூலிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது.

சின்னத்திரையில் ஒளிபரப்பான பிரபலமான “சரவணன் மீனாட்சி” தொடரின் மூலம் வேட்டையனாக அனைவரது மனதிலும் பதிவாக துவங்கிய அவர் நாளடைவில் தனது மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெரிய திரைக்குச் செல்லும் வாய்ப்பையும் பெற்றார். அதோடு சீரியல்களை முடித்த பின்னர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவருக்கு பெரிய ஆதரவு கிடைத்தும் அவர் டைட்டிலை வெல்வது குறித்து யோசிக்காமல் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு திடீரென வெளியேறினார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது சினிமாவில் சாதிக்கும் ஒரு நடிகராக கவின் பெயர் பெற்றுள்ளார். அந்த வகையில் பிக்பாஸிற்கு பின்னர் லிஃப்ட் என்கிற படத்தின் மூலம் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த கவின் அடுத்தடுத்து கதையை மட்டுமே நம்பி படத்தினை தேர்வு செய்து வருகிறார்.
Wedding bells for Rising Star Kavin.. ⭐ to tie the knot with his longtime girlfriend Monica on August 20 with the blessings of both families..❣️ pic.twitter.com/mtZVX6r6L9
— Laxmi Kanth (@iammoviebuff007) August 1, 2023
அந்த வகையில் இறுதியாக அவர் நடித்த டாடா படம் அனைவரது மத்தியிலும் மிகச் சிறப்பாக வரவேற்பை பெற்றிருந்த வேளையில் அடுத்தடுத்ததாக கவின் புதிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் கவின் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை என்றாலும் இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அதோடு இந்த திருமணமானது காதல் திருமணமாகும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு கவின் திருமணம் செய்யப்போகும் அந்தப் பெண் தனியார் பள்ளி ஆசிரியை என்றும், அவரது பெயர் மோனிகா என்ற தகவலும் வெளியாகி உள்ளன. அதோடு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. கவின் அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதும் குறிப்பிடத்தக்கது.





