- Advertisement -
Homeபொழுதுபோக்குவாரத்தில் 2 நாட்கள் அதற்கு தடை - நடிகர் விஜய் எடுத்த முக்கிய முடிவு; தளபதி...

வாரத்தில் 2 நாட்கள் அதற்கு தடை – நடிகர் விஜய் எடுத்த முக்கிய முடிவு; தளபதி இப்படி எல்லாம் கூட பண்ணுவாரா?

- Advertisement -

சுவர் இருந்தால் தான் சித்திரம் என்ற பழமொழி இருக்கிறது. அதனால் மனிதர்களுக்கு உடல் ஆரோக்கியம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமானது மட்டுமல்ல, முதன்மையானதும் கூட. அதிலும் கலைஞர்கள் தங்களது உடல் நலனில் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையும் கவனமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எப்போதுமே வெற்றியாளராக பவனிவர முடியும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உடல் ஆரோக்கியத்தில் நடிகர்கள் எம்ஜிஆர் நம்பியார் சிவக்குமார் போன்றவர்கள் மிக கவனமாக இருந்தார்கள். கமல்ஹாசனுக்கு எப்போதுமே உடல் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உடல் நல பாதிப்புகளுக்கு பிறகு கடந்த பல ஆண்டுகளாக அதிக விழிப்புணர்வுடன் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறார்.

- Advertisement -

அந்த வகையில் நடிகர் விஜய் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர். நடிக்க ஆரம்பிக்க 1992ம் ஆண்டில் இருந்து 33 ஆண்டுகளாக இன்னும் ஒரே மாதிரியான தோற்றத்தில் விஜய் காணப்படுகிறார். அதற்கு முக்கிய காரணம் அவரது உணவு பழக்கமும், உடற்பயிற்சியும்தான். பெரும்பாலும் விஜய் எளிமையான உணவு பழக்கத்தையே பின்பற்றுகிறார்.

குறிப்பாக மதிய வேளைகளில் தயிர் சாதம்தான் அவரது பிரதான உணவாக இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்களில் அசைவ விருந்தே நடந்தாலும் அவர் விரும்பி சாப்பிடுவது தயிர் சாதம் ஊறுகாய்தான். அதே போல் விஜய்க்கு மிகவும் பிடித்தது மட்டன் பிரியாணி. தோசை தான். அடிக்கடி தோசை அவரே சுட்டு சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.

- Advertisement -

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் அவரது வீட்டில் ஒரு நேர்காணல் நடந்திருக்கிறது. அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தன் வீட்டில் உள்ள டைனிங் டேபிள் முன் அமரும் விஜய், என்ன இருக்கிறது என கேட்டபடி அங்குள்ள பாத்திரங்களை திறந்து பார்க்கிறார். மட்டன் குழம்பு, சாதம் எல்லாம் இருக்கிறது.

அந்த உணவை தானே பறிமாறிக்கொண்டு சாப்பிடும் விஜய், எனக்கு நான்வெஜ் ரொம்ப பிடிக்கும்ங்க. தினமும் நான்வெஜ் இல்லாமல் சாப்பிட மாட்டேன். ஆனால் வீட்டுல இப்போ புது ரூல்ஸ் கொண்டு வந்துட்டாங்க. செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை நான்வெஜ் இல்லைன்னு சொல்லிட்டாங்க. அதனால் நான் ஷூட்டிங்கில் அந்த 2 நாளும் நான்வெஜ் சாப்பிட்டுடுவேன் என்று ஜாலியாக பேசிய அந்த பழைய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்