தமிழ் சினிமாவில் மிகவும் கவனம் பெற்ற இயக்குனர் விக்ரமன். புது வசந்தம் துவங்கி பல சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்தவர். குறிப்பாக சூரிய வம்சம் வானத்தை போல பிரியமான தோழி உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பூவே உனக்காக உன்னை நினைத்து போன்ற மிக நல்ல படங்களை தந்தவர்.
விக்ரமன் படங்கள் என்றாலே அது குடும்ப படங்களாக தான் இருக்கும். அதே நேரத்தில் நல்ல பாடல்கள் நல்ல காமெடி தோல்வியில் இருந்து நாயகன் வெற்றி பெறுவது போன்ற விஷயங்களை உள்ளடக்கிய நல்ல கதையம்சம் உள்ள படங்களை தான் அவர் தந்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக சரத்குமார் தேவயானி ராதிகா நிழல்கள் ரவி மணிவண்ணன் ஆர் சுந்தர்ராஜன் ஆனந்தராஜ் அஜய் ரத்னம் ஜெய் கணேஷ் சத்தியப்பிரியா பிரியா ராமன் உள்ளிட்டோர் நடித்த படம் சூரிய வம்சம். இந்த படம் கடந்த 1990களில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் நடிகர் சரத்குமார் அப்பா மகன் என 2 வேடங்களில் நடித்திருந்தார். அப்பாவுக்கு பிடிக்காத மகனாக இருக்கும் சரத்குமார் ஒரு கட்டத்தில் ஊரே பாராட்டும்படியாக ஒரு உயர்ந்த நிலையில் சமுதாயத்தில் முன்னேறி காட்டுவார். தேவயானி மாவட்ட கலெக்டராக இருப்பார் போன்ற கதையில் இந்த படம் உருவாகி இருந்தது.
இந்த படம் குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் அதிக மக்கள் வந்து பார்த்த படம் சூரிய வம்சம்தான். யூடியூப்பில் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி என 70 கோடி பேர் பார்த்து ரசித்த படம்தான் சூரிய வம்சம். அந்தளவுக்கு இந்த படம் ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக இருக்கிறது.
இப்போது டிவி சேனல்களில் சூரிய வம்சம் திரையிட்டால் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. சூரிய வம்சம் படத்தை 2ம் பாகமாக எடுத்தால், அதை மிகச் சரியாக எடுக்க வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமான கதை திரைக்கதையில் உருவாக்க வேண்டும். அதனால்தான் சூரிய வம்சம் படத்தின் 2ம் பாகத்தை இன்னும் எடுக்காமல் இருக்கிறேன் என்று இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார்.





