மலையாளத்தில் வெளியான பிரேமலு படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் சாய்பல்லவி. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த இவர் டாக்டர். எனினும் சினிமா மீதான ஆர்வத்தால் நடிக்க வந்துவிட்டார். பிரேமலு படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் மலையாள நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
சாய்பல்லவியின் திருத்தமான அழகும் துருதுருப்பான கண்களும் குறிப்பாக நளினமான நடனமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை அடையாளத்தை அவருக்கு பெற்றுத் தந்தது. தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷூடன் மாரி 2 படத்திலும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே படத்திலும் நடித்தார். பிறகு கார்கி படம் சாய்பல்லவிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
எனினும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்த படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு பெரிய அங்கீகாரம் வரவேற்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. இதில் இந்து ரெபேகா வர்கீஸ் என்ற கேரக்டரில் அவர் வாழ்ந்து காட்டியிருந்தார். தமிழக அரசு சமீபத்தில் சாய்பல்லவிக்கு கலைமாமணி விருது அறிவித்துள்ளது.
நடிகை சாய்பல்லவி இப்போது இராமாயணா என்ற படத்தில் மெகா பட்ஜெட் பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். இராமாயணா முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் சீதை கேரக்டரில் சாய்பல்லவி நடித்து வருகிறார். இந்த சீதை கேரக்டரில் நடிப்பதற்காக பல பட வாய்ப்புகளை அவர் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியில் ஏற்கனவே ஏக்தீன் என்ற படத்தில் சாய்பல்லவி நடித்துள்ள நிலையில் நடிகர் பிரபாஸின் கல்கி 2898ஏடி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். படத்தின் தயாரிப்பு நிறுவனமும் அதை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது நடிகை தீபிகா படுகோனேவுக்கு பதிலாக கல்கி 2898 ஏடி படத்தின் 2ம் பாகத்தில் நடிப்பதற்கு நடிகை சாய் பல்லவியிடம் படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் கல்கி 2898 ஏடி படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த 2026ம் ஆண்டுதான் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவலும் வெளியாகி உள்ளது.





