- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் பிறந்த நாள் ஜூன் 22ல் ஜனநாயகன் படத்தின் அப்டேட் வருமா? தவெக தலைவராக முக்கிய...

விஜய் பிறந்த நாள் ஜூன் 22ல் ஜனநாயகன் படத்தின் அப்டேட் வருமா? தவெக தலைவராக முக்கிய முடிவு எடுத்த தளபதி!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். விஜய் நடிக்க வேண்டிய போர்ஷன் அனைத்தும் கடந்த 2 நாட்களுக்கு முன்பே முடிந்து விட்டது. படத்தை ரஷ் காப்பியாக பார்த்த இயக்குனர் எச் வினோத் படம் மிக சிறப்பாக வந்திருப்பதாக படக்குழுவினரிடம் சந்தோஷமாக கூறியிருக்கிறார். படக்குழு சார்ந்த சில முக்கிய டெக்னிஷியன்களும் படத்தை பார்த்துவிட்டனர்.

இது விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை தெலுங்கு படமான பகவந்த் கேசரியின் ரீமேக் என்று கூறப்பட்டாலும் இன்னும் படக்குழு அதை உறுதிப்படுத்தவில்லை. படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கேரக்டரில் மமிதா பைஜூவும் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் 22ம் தேதி நடிகர் விஜயின் 51வது பிறந்த நாளாகும். அந்த சிறப்பு நாளில் ஜனநாயகன் படத்தின் முக்கிய அப்டேட் எதுவும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக ஜனநாயகன் படத்தின் டீசர் அல்லது டிரெய்லர் ஏதேனும் வெளியாகுமா என்றும் தளபதி ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் இப்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி வருகிற ஜூன் 22ம் தேதி ஜனநாயகன் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளிவராது என்று தெரிய வந்துள்ளது. ஏனெனில் நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக அரசியலில் மிக தீவிரம் காட்டி வருகிறார். வருகிற சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி பூத் கமிட்டி கூட்டங்களை நடத்தி வருகிறார்.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் விஜய் ஜனநாயகன் படம் குறித்த அப்டேட் மற்றும் புதிய தகவல்கள் ரசிகர்கள் மற்றும் தவெக கட்சி தொண்டர்களின் மனநிலையை மாற்றிவிடும் என்பதால் இப்போதைக்கு எந்த அப்டேட்டும் வேண்டாம் என்று கண்டிஷனாக கூறிவிட்டார். ஜனநாயகன் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை கூட இப்போது வெளியிட வேண்டாம் என்று தடை போட்டிருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தமிழ்நாட்டில் அதிக கவனம் பெற்று வருகிறது. விஜய் மீதான அரசியல்வாதி பிம்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் மத்தியில் தவெக கட்சிக்கு ஆதரவு அலை அதிகரித்திருப்பதாக அவருக்கு தகவல்கள் வருவதால் அதையே மெயின்டெயின் செய்து கட்சியை வலுப்படுத்த விஜய் திட்டமிடுகிறார். அதனால் ஜனநாயகன் படம் அப்டேட்டுகளை படம் ரிலீஸாக ஒரு மாதம் இருக்கும்போது செய்துக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்