- Advertisement -
Homeபொழுதுபோக்குபோடு வெடிய, நடிகர் விஜயின் அரசியல் அதிரடி ஆட்டம் இனிதே ஆரம்பம் - கட்சி பெயர்...

போடு வெடிய, நடிகர் விஜயின் அரசியல் அதிரடி ஆட்டம் இனிதே ஆரம்பம் – கட்சி பெயர் இதுதான், கட்சி துவங்கும் மாநாடு நடக்கும் இடமும் அதுதான்

- Advertisement -

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் அதற்கான அறிவிப்பை வெளியிட விஜய் தயாராகி வருகிறார் என்பது அரசல்புரசலாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன.

இரண்டு தினங்களுக்கு முன், விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களை, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்திய விஜய், அரசியல் கட்சி துவங்கினால் என்னென்ன மாதிரியான செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார்.

- Advertisement -

அத்துடன், மக்கள் மத்தியில் விஜய் அரசியல் வருகை எப்படி பார்க்கப்படுகிறது, அதாவது அவர்களது பல்ஸ் ரேட் எப்படி உள்ளது, திமுக அதிமுக என்ற 2 கட்சிகளை கடந்து புதிய கட்சியை துவங்கி, அரசியல் களத்தில் இறங்கும் தனக்கான வரவேற்பு ரசிகர்களை தவிர்த்து, பொதுவாக மக்கள் மனதில் எப்படி இருக்கும் என்பது குறித்தும் விஜய், ஆழமாக யோசித்து இருக்கிறர். அதுபற்றியும் நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்.

இப்போது விஜய் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய தகவல்கள் அவரின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வெளியே கசிந்திருக்கின்றன. அவை இணையத்தில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் அவர் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த விஷயங்களும் தெரிய வந்திருக்கின்றன.

- Advertisement -

தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி தனது புதிய அரசியல் கட்சியை விஜய் துவங்குகிறார். அன்றைய தினம் மதுரையில் மிகப்பெரிய அரசியல் மாநாட்டை நடத்தி கட்சியின் பெயர், கட்சி கொடி ஆகியவற்றை விஜய் அறிமுகப்படுத்துகிறார். நடிகர் கமல்ஹாசன், கேப்டன் விஜயகாந்த் இருவருமே மதுரையில்தான் தங்களது கட்சி பெயரை, கட்சி கொடியை மதுரையில்தான் அறிமுகப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல், நடிகர் விஜய் தனது கட்சிக்கு ‘ மக்கள் கட்சி’ என்று இரண்டே வார்த்தைகளில் பெயர் வைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்துமே செவி வழி தகவல்களாக, விஜயின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளன. ஆனால் விஜய் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்