- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத் படத்தில் நடிக்க மறுத்துவிட்டு விஜய் படத்தில் நடித்த ஹீரோயின்- இவருக்கு நம்ம கேப்டன் குசும்பா...

அஜீத் படத்தில் நடிக்க மறுத்துவிட்டு விஜய் படத்தில் நடித்த ஹீரோயின்- இவருக்கு நம்ம கேப்டன் குசும்பா ஒரு பேரும் வெச்சிருக்காருங்க

- Advertisement -

தமிழ் சினிமாவில், சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். அதற்கு அவர்கள் ஏற்று நடிக்கும் கேரக்டர்களும், அவர்களின் நடிப்பும் முக்கிய காரணமாக இருக்கும். அப்படிபட்ட நடிகைகளில் ஒருவர்தான் சங்கீதா. சினிமாவில் பல சங்கீதாக்கள் இருப்பதால், இவரது அடையாளம் பூவே உனக்காக சங்கீதா.

இவர் குழந்தை நட்சத்திரமாக, சிறுமியாக பல படங்களில் நடித்திருக்கிறார். இதயவாசல், நாடோடி, சின்ன பசங்க நாங்க போன்ற படங்களில் சிறுமியாக பார்க்கலாம். கதாநாயகியாக பூவே உனக்காக, காலம் மாறிப்போச்சு, பொங்கலோ பொங்கல், கங்கா கவுரி, சீதனம், வள்ளல், அலெக்ஸாண்டர், எல்லாமே என் ராசாதான், புள்ளக்குட்டிக்காரன், அம்மன் கோவில் வாசலிலேயே போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

பூவே உனக்காக படத்தில் நடித்த போது, அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணனை காதல் திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு சங்கீதா சினிமாவில் நடிக்கவில்லை. மீண்டும் இப்போது நடிக்க துவங்கி இருக்கும் சங்கீதா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

காதல் கோட்டை, பூவே உனக்காக என இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போது, பூவே உனக்காக படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தேன். அந்த படத்தில் நடித்த பிறகு, பூவே உனக்காக, விஜய் படத்தில் நடித்த சங்கீதா என்றே பெயரே நிலைத்துவிட்டது. விஜயை சமீபத்தில் சந்திக்கவில்லை. பூவே உனக்காக படத்தில், நாங்கள் ஒன்று சேருவது போலவும் ஒரு கிளைமேக்ஸ் இருந்தது. ஆனால், பிரிந்து போகும் கிளைமேக்ஸ் படத்தை வெற்றி பெற செய்துவிட்டது.

அலெக்ஸாண்டர் படத்தில் நடித்த போது, விஜயகாந்த் சேரில் உட்காரும்போது கம்பீரமாக முதுகு நிமிர்ந்துதான் உட்காருவார். நான் ஈஸி சேரில் சாய்ந்தது போல, சேரில் படுத்திருப்பேன். அதை பார்த்து, இந்த வயசுல, இப்படி பலவீனமாக இருக்கறீங்களே என்பார். நான் நடித்த படங்களில் விஜயகாந்த் உடன் நடித்ததை தான் மிக சவுகரியமாக உணர்ந்தேன்.

இப்போது உடல் நலமில்லாத நிலையில், அவரை சந்தித்தால், உடல் நலம் விசாரிக்க வேண்டும். எனக்கு அவர் வைத்த பெயர் நினைவிருக்கிறதா என்று கேட்க வேண்டும், அவருடன் நடித்த போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னை மகால் எக்ஸ்பிரஸ் என்றுதான் பேர் வைத்து அழைப்பார். அப்போது எனக்கு அதுபற்றி தெரியவில்லை. பின்னால், விசாரித்த போது மகால் எக்ஸ்பிரஸ் மிக மிக மெதுவாக வருமாம். அப்படி நான் ஸ்லோவாக இருப்பதால், கிண்டலடித்து அப்படி பேர் வைத்திருக்கிறார், என்று கூறியிருக்கிறார் சங்கீதா.

சற்று முன்