உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் தற்போது ரிலீசாகி உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஜினிகாந்த் படம் திரையரங்குகளல் களம் இறங்கி இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நெல்சன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், மோகன்லால், ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கிஜராஃப், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், ரெடின் கிங்ஸ்லீ, வி டிவி கணேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
#Jailer celebrations started in Canada 💥💥💥💥#Rajinikanth #SuperstarRajnikanth #Thalaivar #ThalaivarNirandharam #ThalaivarAlapparai #JailerBookings #JailerTickets #JailerFDFS pic.twitter.com/blm7Xs5Gfm
— Achilles (@Searching4ligh1) August 10, 2023
ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான காவாலையா, டைகர் கா ஹுக்கும் பாடல்கள் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தன. படத்தின் டிரைலரும் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. ரஜினிக்கே உண்டான ஆக்சன் காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் நிறைந்து இருப்பது டிரைலரில் நன்றாக தெரிவதாக ரசிகர்கள் கூறினர்.
ஜெயிலர் திரைப்படத்திற்கான முன்பதிவு இதுவரைக்கும் இல்லாத அளவு இருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் முன்பதிவிற்கு மட்டுமே 27 கோடி ரூபாய் வசூல் ஆகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல், மாநிலத்திலேயே முதல் முறையாக 900 திரையரங்குகளில் ஜெயிலர் வெளியாகி இருப்பதாகவும் சினிமா விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
#Jailer Andhra/TS celebration started already 🤗💥💥💥 #Rajinikanth #SuperstarRajnikanth #Thalaivar #ThalaivarNirandharam #ThalaivarAlapparai #JailerBookings #JailerTickets #JailerFDFSpic.twitter.com/KeyEEQnjL3
— Achilles (@Searching4ligh1) August 9, 2023
தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜெயிலர் திரைப்படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக உள்ளது என கூறப்பட்டது. கர்நாடகாவில் கேஜிஎப் இரண்டாம் பாகத்தை விட, ஜெயிலருக்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாகவும், அதன் முன்பதிவுக்கான வசூலும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அலப்பறை கிளப்புறோம்#JailerFDFS #Jailer pic.twitter.com/i3e4f77DxH
— SureshEAV (@Dir_Suresheav) August 10, 2023
இந்த நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருப்பதால், தமிழ்நாடு மட்டுமின்றி திரையிட்ட அனைத்து இடங்களிலும் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. திரையரங்குகளில் நள்ளிரவிலேயே கூடிய ரசிகர்கள், பட்டாசு வெடித்து ஆட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் திரையரங்குகள் திருவிழா கோலம் போட்டுள்ளன. கனடா போன்ற வெளிநாடுகளிலும் ரஜினி ரசிகர்கள் ஜெயிலரை கொண்டாடி வருகின்றனர்.
#Jailer day @RohiniSilverScr pic.twitter.com/QIwP0btHNl
— SureshEAV (@Dir_Suresheav) August 10, 2023
இதனிடையே படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், ரஜினி யோகி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் நகைச்சுவையாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினிக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





