- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரேமலதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள், கண்ணீர் விட்ட ரசிகர்கள், எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே...

பிரேமலதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள், கண்ணீர் விட்ட ரசிகர்கள், எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே – விரைவில் பூரணநலம் அடைவாரா?

- Advertisement -

நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக 1980, 90களில் வலம் வந்தவர். குறிப்பாக பெண் ரசிகைகள் மனம் கவர்ந்த நாயகராகவும் இருந்தார். அதே வேளையில் ஆக்சன் நடிகராகவும் கலக்கினார். விஜயகாந்த் படங்கள் என்றாலே, ஏ, பி, சி சென்டர் என நகரங்களிலும், கிராமங்களிலும் ரசிகர் கூட்டம் அதிகமாக காணப்படும்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்த போது மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில், சங்க நிதி வளர்ச்சிக்காக கலைநிகழ்ச்சி நடத்தினார். அதுவரை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காத ரஜினி, கமல் போன்றவர்கள், விஜயகாந்த் அழைத்தவுடன் எந்தவித மறுப்பும் சொல்லாமல் உடனே ஓகே சொன்னார்கள். நிகழ்ச்சியிலும் தவறாமல் பங்கேற்றனர்.

- Advertisement -

அந்தளவுக்கு விஜயகாந்த் சொன்னால் ரஜினி, கமல் போன்றவர்களே மறுத்து பேச முடியாத அளவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியில் விஜயகாந்த், கம்பீரமான ஒரு மனிதராக இருந்தார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்தில் ஒரு ஹீரோ போன்ற பண்புகளுடன் அவர் காணப்பட்டார். அவரிடம் எந்த பஞ்சாயத்து சென்றாலும், சரியாக முடிவுகளை சொல்வார்.

அப்படி தமிழ் சினிமாவில் நடிகராக, சினிமாத்துறையில் ஒரு சிறந்த நிர்வாகியாக இருந்த விஜயகாந்த், ஒரு கட்டத்தில் அரசியல் களத்தில் குதித்தார். தமிழக அரசியலில் பெரிய அளவில் பேசப்படும் அளவுக்கு முன்னேறினார். ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களை நேருக்கு நேராக விமர்சித்தும், கண்டித்தும் பேசினார். ஆனால், அவரது பேச்சை, குற்றச்சாட்டை மறுக்க முடியாத அளவுக்கு விஜயகாந்த் அப்போதும் நியாயத்தை, உண்மையை மட்டுமே பேசினார்.

- Advertisement -

ஆனால், ஒரு கட்டத்தில் அதிக மதுப்பழக்கம் காரணமாக உடல் நலத்தை, ஆரோக்கியத்தை இழந்த விஜயகாந்த் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். சரிவர பேச முடியாமல் தவித்தார். நினைவுத்திறனை இழந்து, நேரில் நிற்பவரை பெயர் சொல்லி ஞாபகப்படுத்தும் அளவுக்கு அவர் பாதிக்கப்பட்டார். அடிக்கடி உடல் நலம் பாதித்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.

Vijayakanth

விஜயகாந்த் மிகவும் கவலைக்குரிய நிலையில் இருப்பதாக தகவல் பரவியதால், ரசிகர்கள் கவலையடைந்தனர். இந்நிலையில் விஜயகாந்துடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பிரேமலதா வெளியிட்டு இருக்கிறார். தலைமுடி எல்லாம் கொட்டிப் போய், உடல் இளைத்த நிலையில் காணப்படும் விஜயகாந்தை பார்த்து மனம் உருகிய ரசிகர்கள், எப்படி கம்பீரமாக இருந்த மனிதர் இப்படி உருக்குலைந்து போய்விட்டாரே, என பலரும் மனம் அங்கலாய்க்கின்றனர். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட பிரேமலதா, கேப்டன் நலமாக இருக்கிறார். வதந்திகளை நம்பாதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்