- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்னை தி நகரில் நள்ளிரவில் கத்தியுடன் ரோட்டில் ஓடிய மர்ம நபர்… துரத்திய கேப்டன் விஜயகாந்த்...

சென்னை தி நகரில் நள்ளிரவில் கத்தியுடன் ரோட்டில் ஓடிய மர்ம நபர்… துரத்திய கேப்டன் விஜயகாந்த் … பிரபல இயக்குனர் சொன்ன பகீர் சம்பவம்!

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்தவர். கடந்த 1980 90களில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக ரசிகர்களின் அன்பை வரவேற்பை பெற்ற நடிகராக இருந்தார். புரட்சிக்கலைஞர் கேப்டன் என்று அழைக்கப்பட்டார். பல சூப்பர் ஹிட் படங்களை தந்திருக்கிறார். மனிதநேயம் மிக்க நல்ல மனிதராக தன்னை பல விஷயங்களில் வெளிப்படுத்தியவர்.

எப்போதுமே தனது அலுவலகத்துக்கு வரும் அனைவருக்கும் உணவு வழங்கியவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருக்கும் ஒரே விதமாக உணவு பரிமாற வைத்தவர். அத்துடன் தனது பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக மாற்றியவர். மேலும் துணிச்சல் மிக்கவர். எந்த இடத்திலும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு யாருடனும் மோதும் தைரியம் மிக்கவர்.

- Advertisement -

கடந்த 1980களில் முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் எஸ்ஏ சந்திரசேகர். புரட்சி இயக்குனர் என்று அழைக்கப்பட்டவர். நடிகர் விஜயகாந்த் நடித்த பல படங்களை எஸ்ஏசி இயக்கியவர். தனது மகன் விஜய்க்காக கேட்ட போது செந்தூரபாண்டி படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தவர் கேப்டன் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் விஜயகாந்த் குறித்து ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அப்போது எஸ்ஏசி கூறியதாவது, படத்தில் மட்டும் இல்லே. நிஜத்தில் 10 பேரை துணிச்சலாக அடிப்பார் விஜயகாந்த். அவர் பிறந்தது மதுரை மண்ணுல. ஆள் பார்க்கவே நல்லா வாட்டசாட்டமா இருப்பார்.

- Advertisement -

கடந்த 1986ம் ஆண்டில் நடந்த சம்பவம் இது. சென்னை தி நகர் பனகல் பார்க் வழியாக நைட் 1:30 மணிக்கு ஷூட்டிங் முடிச்சுட்டு விஜயகாந்தும் நானும் காரில் போயிட்டு இருந்தோம். அப்போ ஒரு ஆள் கையில் கத்தியோடு ஒருத்தனை துரத்திகிட்டு வேகமாக போறான்.

அதை பார்த்த அவசரமா காரை நிறுத்தச் சொன்ன விஜயகாந்த் உடனே இறங்கி ஓடினார். கத்தியோடு ஓடிய அவனை துரத்தி பிடிச்சுட்டார். அப்புறம் கத்தியை பிடுங்கி அவனை அடிச்சி தி நகர் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு வந்து ஒப்படைச்சார். அப்புறம்தான் நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தோம் என்று இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்