தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகராக இருக்கும் விஜய்க்கு, ஆரம்பகட்டத்தில் அதற்கான பாதை அமைத்துக் கொடுத்தவர் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர். தமிழ் சினிமாவின் இயக்குனரான அவர், ரஜினியை வைத்து சட்டம் ஒரு இருட்டறை படத்தை கொடுத்தவர். நான் சிகப்பு மனிதன் உள்பட பல்வேறு வெற்றி திரைப்படங்களை அவர் இயக்கியிருக்கிறார்.
இவரது இயக்கத்தில் சிறுவயதில் நடித்து வந்த விஜய், 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் தன்னை நடிகராக அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால் அந்த திரைப்படம் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. அதுமட்டுமல்லாமல், இவரெல்லாம் ஹீரோவா என்ற கடும் விமர்சனத்திற்கும் விஜய் ஆளானார்.
இருப்பினும் விஜய்க்கு ஒரு நல்ல பாதையை தேர்வு செய்வதில் கவனமாக இருந்த எஸ்ஏ சந்திரசேகர், தனது மகனை வைத்து பல்வேறு திரைப்படங்களை இயக்கினார். இதில் செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த சமயத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படம் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் அவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற முதல் திரைப்படம் என்று கூறலாம். இந்த வெற்றியை தக்க வைக்கும் வகையில் அடுத்ததாக காதலுக்கு மரியாதையை விஜய் கொடுத்தார்.
இப்படி படிப்படியாக முன்னேறிய அவர் தற்போது தமிழ் சினிமாவின் ஆலமரமாய் பறந்து விரிந்து இருக்கிறார். விஜய் படம் என்றாலே அது பாக்ஸ் ஆபிஸ் கிட் என்ற நிலையை அவர் கொண்டு வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே அவர் தனது தளபதி மக்கள் இயக்கம் மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்து வந்த நிலையில், அவரை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மிக தீவிரமாக இருந்தார்.
இதற்காக 2020 ஆம் ஆண்டு அவரிடம் கேட்காமலேயே விஜய் பெயரில் ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்தார். உடனடியாக இதற்கு விஜய் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அன்று முதல் தந்தைக்கு மகனுக்கும் இடையே பனிப்போர் பிடித்தது. இப்படியான சூழலில் தற்போது விஜய், தனது தந்தை எஸ் ஏ சந்திர சேகர் மற்றும் தாய் சோபாவை நேரில் சந்தித்து இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்ததை தொடர்ந்து அவர் பெற்றோரை சந்தித்திருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனது மகன் சந்தித்ததை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள எஸ்ஏ சந்திரசேகர் இன்று என்று குறிப்பிட்டுள்ளார்.





