- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகையுடன் தொடர்பு… விஜயுடன் இனி சேர்ந்து வாழ விரும்பலே… விவகாரத்து கேட்டு செங்கல்பட்டு கோர்ட்டில் மனுதாக்கல்...

நடிகையுடன் தொடர்பு… விஜயுடன் இனி சேர்ந்து வாழ விரும்பலே… விவகாரத்து கேட்டு செங்கல்பட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்த மனைவி சங்கீதா!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். கடந்த 2024ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய அவர் அந்த கட்சியின் தலைவராக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். வருகிற சட்டசபை தேர்தலில் அவர்தான் முதல்வர் என்று தவெக கட்சியினர் மேடைகளில் கூறி வருகின்றனர்.

இந்த ஒரு சூழலில் பல ஆண்டுகளாக நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள பங்களாவில் தனித்து வாழ்வதாகவும் அவரது மனைவி சங்கீதா கடந்த பல ஆண்டுகளாக அவரை பிரிந்துசென்று தனித்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது, மேலும் சங்கீதாவுடன் மகள் திவ்யாவும் இருந்து வந்தார்.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சென்னையில் இருந்தாலும் அப்பா விஜயை நேரில் ஒருமுறை கூட சந்திக்கவில்லை. அவர் டைரக்ட் செய்த சிம்கா படப்பிடிப்பு தளத்துக்கு ஒருமுறை கூட அவரது அப்பா விஜய் நேரில் வந்து பார்க்கவில்லை. இந்த படத்தின் துவக்கவிழா பூஜையும் விஜய் பங்கேற்வில்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இப்போது, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. என் கணவர் விஜயுடன் எனக்கு சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. இந்த வழக்கு 73/2026 என எண்களில் பதிவாகி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

அந்த விவாகரத்து கோரிய மனுவில் முக்கிய பகுதியாக, விஜயின் மனைவி சங்கீதா கூறியிருப்பதாவது, நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டு இருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன் என்று விவாகரத்து கோரிய விஜயின் மனைவி சங்கீதா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்க்கு திருமண வாழ்வில் ஏற்பட்டுள்ள இந்த கசப்பான ஒரு திடீர் திருப்பம், அவரது ரசிகர்களுக்கும் தவெக கட்சியினருக்கும் பலத்த அதிர்ச்சியை தந்திருக்கிறது. அதே நேரத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிற ஒரு சூழலில் இப்படி ஒரு அதிர்ச்சியான முடிவை சங்கீதா எடுத்திருப்பதும் விஜயின் அரசியல் ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்